districts

img

தாழ்வான ரயில்வே தரைப்பாலம்: மக்கள் அவதி

தருமபுரி, டிச.12- பாலக்கோடு அருகே உள்ள தாழ்வான ரயில்வே தரைப்பாலத்தால் அப்பகுதி பொது மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்ற னர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள வாழைத்தோட்டம் கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்திற்கு செல்லும் பிரதான நுழைவு வாயிலில் உள்ள ரயில்வே தரைப்பாலம் மிகவும் தாழ்வாக வும், குறுகியதாகவும் உள்ளது. இதனால் கடந்த 60 ஆண்டுகளாக கனரக வாகனங்கள் ஊருக்குள் வர முடியாமல், 8 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டியுள்ளது. மேலும், இக்கிராமத்திற்குள் சரக்கு வாக னங்கள், டிராக்டர் போன்ற எந்த வாகனங் களாலும், விவசாய பொருட்களை ஏற்றி  செல்ல முடிவதில்லை. அவசர காலங்களில் மருத்துவமனைக்கு செல்ல 108 ஆம்புலன்ஸ், தீயனைப்பு வாகனங்கள் வர வழியில்லாத தால் நோயாளிகள், கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு உரிய நேரத்திதில் சிகிச்சை அளிக்க முடியாமல் அவ்வப்போது உயிரி ழப்புகள் ஏற்பட்டு வருவதாக அக்கிராம மக் கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். இப் பகுதியில் ரயில்வேக்கு சொந்தமான நிலம் உள்ளதால், சாக்கடை கால்வாய் அமைக்க அனுமதி வழங்கப்படாமல், கழிவுநீர் ஊருக் குள் தேங்கி நிற்கிறது. பள்ளி, கல்லூரி செல் லும் மாணவர்கள், பொதுமக்கள் சாக்கடை கழிவுநீரில் நடந்து செல்வதால், பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 60 ஆண்டுகளாக இதே நிலைமை தொடர்ந்து நீடித்து வருகிறது. எனவே, தாழ் வான பாலத்தை கனரக வாகனங்கள் சென்று வரும் வகையில் மாற்றியமைக்க வேண்டும். கழிவுநீர் கால்வாய் அமைத்து, கழிவுநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி யுள்ளனர்.