districts

img

திருப்பூர் இலக்கிய விருது 2022

திருப்பூர், ஜூன் 7- திருப்பூர் சன்மார்க்க சங்கக் கட்டிடத்தில் ஞாயிறன்று  நடந்த இலக்கிய விழாவில் தமிழகத்தைச் சார்ந்த 66 எழுத்தா ளர்களுக்கு திருப்பூர் இலக்கிய விருது 2022 வழங்கப் பட்டது. இதில், கல்வியாளர் முத்துச்சாமி வரவேற்றார். எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன், வழக்கறிஞர் ரவி ஆகியோர் எழுத்தாளர்களை அறிமுகம் செய்து வைத்தனர்.  திருப்பூர் மாநகராட்சியின் துணை மேயர் பாலசுப்ர மணியம் இலக்கிய விருதுகள் வழங்கி பேசியதாவது, “இன்றைய கணினி மற்றும் தொழில்நுட்ப உலகத்தில்  தமிழின் தொன்மையும், கலாச்சாரமும் காப்பாற்றப்பட வேண்டியதன் அவசியம், அதைச் செய்கிற பணியில் எழுத்தாளர்களுக்கு முக்கிய பங்கு உண்டு. அதை தங்களின் சமூகப்பணியாகக் கொண்டு எழுத்தாளர்கள் செயல் பட வேண்டும் என்று குறிப்பிட்டார். இவ்விழாவுக்கு திருப்பூர் முத்தமிழ்ச் சங்கத் தலைவர் கே.பி.கே. செல்வராஜ் தலைமை தாங்கினார். மூத்த எழுத்தா ளர் நாமக்கல் நாதன் துவக்க உரையாற்றினார். அதைத் தொடர்ந்து விருது பெற்ற எழுத்தாளர்கள் தங்க ளின் படைப்பு அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார் கள். முத்தமிழ்ச் சங்கத்தை சேர்ந்த கே.பி.கே. பாலசுப்ர மணியம் நன்றி கூறினார்.  முத்தமிழ்ச் சங்கமும், கனவு இலக்கிய அமைப்பும் இணைந்து இந்த விழாவை ஏற்பாடு செய்திருந்தன.