districts

img

மாணவர் சங்கத்தினர் விடுதலை

கோவை, மார்ச் 16- நீட் தேர்வுக்கு எதிராக மாணவர் சங்கத்தினர் நடத்திய ஜனநாயக ரீதியான போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் மீது அன்றைய அதிமுக அரசு பொய் வழக்கு பதிவு செய்தி ருந்தது. கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக கோவை  நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கில் இருந்து  மாணவர் சங்கத்தினர் அனைவரும் விடுதலை செய்யப் பட்டனர்.  நீட் தேர்வில் உயிரிழந்த மாணவிக்கு நீதி கேட்டும், ஏழை எளிய மாணவர்களின் மருத்துவர் கனவை சீர்குலைக்கும் நீட்  தேர்வை ரத்து செய்யக் கோரி, கோவையில் கடந்த 2019 ஆம்  ஆண்டு, இந்திய மாணவர் சங்கத்தின் கோவை மாவட்ட  குழு சார்பில் போராட்டம் நடைபெற்றது. இப்போராட் டத்தில், பங்கேற்ற மாணவர் சங்கத்தின் நிர்வாகிகள் 11 பேர் மீது அன்றைய அதிமுக அரசு பொய் வழக்கு பதிவு  செய்தது.  இவ்வழக்கு  விசாணை கடந்த நான்கு ஆண்டுகளாக  கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஜேஎம் 3ல்  நடைபெற்று வந்தது. இதனையடுத்து, இவ்வழக்கின் தீர்ப்பு  வியாழனன்று வழங்கப்பட்டது. இதில், மாணவர் சங்கத் தினர் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். முன்னதாக, இவ்வழக்கினை திறம்பட நடத்தி மாணவர் சங்கத்தினருக்கு விடுதலையை பெற்றுத்தந்த அகில இந்திய  வழக்கறிஞர்கள் சங்கத்தின் நிர்வாகி, வழக்கறிஞர் கோபால்  சங்கர், பி.செல்வராஜ் ஆகியோருக்கு மாணவர் சங்கத் தினர் நன்றி தெரிவித்தனர்.