districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

சேலம் மண்டலக் கூட்டுறவுத் துறையில் 15 பேர் இடமாற்றம்

சேலம் மண்டலக் கூட்டுறவுத் துறையில் 15 பேர் இடமாற்றம் சேலம், ஜூன் 26- சேலம் மண்டலக் கூட்டுறவுத் துறையில் பணியாற்றி  வந்த, 15 பேர் பவ்வேறு பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து சேலம் மண்டல இணைப் பதிவாளர் ரவிக்குமார் பிறப்பித்துள்ள உத்தரவில், சேலம் மண்டலக்  கூட்டுறவுத் துறையில் பல்வேறு நிலைகளில் பணிபுரி யும் முதுநிலை ஆய்வாளர்கள் 15 பேர் பல்வேறு இடங்க ளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, சேலம் சரக துணைப்பதிவாளர் அலுவலகத்தில் முது நிலை ஆய்வாளராகப் பணிபுரிந்து வரும் விசாலினி,  சுப்ரமணிய நகர் கூட்டுறவு நகர வங்கியில் முதுநிலை ஆய்வாளராகவும், சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் முதுநிலை ஆய்வாளராகப் பணிபுரியும் கோகிலா, சேலம் சரக துணைப் பதிவாளர் அலுவலகத் துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல, வீட்டுவசதி பிரிவு துணைப் பதிவாளர் அலுவலகத்தில்  பணியாற்றிய நிலவொளி, மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்துக்கும், ஓமலூர் துணைப்பதிவாளர் அலுவ லகத்தில் பணியாற்றிய அம்சவள்ளி, மாவட்ட மத்திய  கூட்டுறவு வங்கிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள னர். மேலும், முதுநிலை ஆய்வாளர்களான நிஷாந்தி, பிரியதர்ஷினி, திவ்யா, ராஜேஸ்வரி, இந்திராணி, அனுஜா, பிரகதீஷ்பாபு, பிரியா, வெங்கடேஷ் ஆகி யோர் பல்வேறு இடங்களுக்கும் இடமாற்றம் செய்யப் பட்டுள்ளனர். இதேபோல, சேலம் தணிக்கைத்துறை பால் கூட்டு றவுகளின் மண்டலத் துணை இயக்குநர் அலுவலகத்தில் முதுநிலை ஆய்வாளராகப் பணியாற்றி வரும் கலை வாணி, மேட்டூர் (மீன்வளம்) முதுநிலை ஆய்வாளராக வும், திருச்சியில் முதுநிலை ஆய்வாளராக பணியாற் றிய ஜான்சிராணி, ஆத்தூருக்கும் இடமாற்றம் செய்யப் பட்டுள்ளனர். சேலம் மண்டல கூட்டுறவுத் துறையில் மொத்தம் 15 முதுநிலை ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டின் முன்பிருந்த வாகனம் திருட்டு

வீட்டின் முன்பிருந்த வாகனம் திருட்டு சேலம், ஜூன் 26– சங்ககிரி அருகே வீட்டின் முன்பு நிறுத்தி வைத்தி ருந்த இருசக்கர வாகனத்தை, அடையாளம் தெரியாத 3 நபர்கள் திருடிச் செல்லும் கண்காணிப்பு கேமரா காட்சி கள் வெளியாகி உள்ளது. தருமபுரி மாவட்டம், கோம்பேரியைச் சேர்ந்தவர் அஜித் (27). கட்டிடத் தொழிலாளியான இவர் சேலம்  மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள சின்னாக்கவுண்ட னூர் விநாயகர் கோவில் பகுதியில் தங்கி வேலை செய்து  வருகிறார். இவர், திங்களன்று இரவு தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு தூங்கச்  சென்றுள்ளார். செவ்வாயன்று காலையில் பார்க்கும் பொழுது, வாகனத்தை காணவில்லை. அக்கம் பக்கம்  தேடிப்பார்த்தும் கிடைக்காததால், அருகிலுள்ள கண் காணிப்பு கேமரா காட்சிகளை பார்த்துள்ளார். அதில் அடையாளம் தெரியாத 3 பேர் இருசக்கர வாகனத்தை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது. இது குறித்து அஜித் சங்ககிரி காவல் நிலையத்தில் புகார ளித்தார். அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, கண்காணிப்பு கேமரா காட்சிகளை சேக ரித்து, அடையாளம் தெரியாத நபர்களை தேடி வருகின்ற னர். இதுதொடர்பான காட்சிகள் தற்போது இணையத் தில் வைரலாகி வருகிறது.

உணவு பாதுகாப்புத்துறை சோதனை
உணவு பாதுகாப்புத்துறை சோதனை சேலம், ஜூன் 26- அஸ்தம்பட்டியிலுள்ள ரிலையன்ஸ் சூப்பர் மார்க் கெட்டில் அதிரடி சோதனை மேற்கொண்ட உணவு பாது காப்புத்துறை அதிகாரிகள், காலாவதியான பொருட் களை பறிமுதல் செய்தனர். சேலம் மாவட்டம், அஸ்தம்பட்டி, இட்டேரி சாலை  பகுதியில் ரிலையன்ஸ் ரீடைல் லிமிடெட் என்ற உணவு  வணிக நிறுவனம் (சூப்பர் மார்க்கெட்) செயல்பட்டு வரு கிறது. இந்நிலையில், அங்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் செவ்வாயன்று அதிரடி சோதனை மேற் கொண்டனர். அதில் காலாவதியான கார வகைகள், கெட்டுப்போன காய்கறிகள், பழங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மொத்தம் 31.5  கிலோ கெட்டுப்போன காய்கறி, பழங்கள் மற்றும் 1.25  கிலோ காலாவதியன கார வகைகள் பறிமுதல் செய்யப் பட்டு, அழிக்கப்பட்டன. இதுதொடர்பாக விளக்கம் கேட்டு அறிவிப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விவசாயிகளுக்கு பசுந்தாள் வழங்கல்

விவசாயிகளுக்கு பசுந்தாள் வழங்கல் சேலம், ஜூன் 26- அயோத்தியாப்பட்டினம் பகுதி விவசாயிகளுக்கு பசுந் தாள் வழங்கப்பட்டன. சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டினம் வட்டார வேளாண்மை துறை மூலம், தமிழ்நாடு முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின்படி, விவசாயிகளுக்கு பசுந்தாள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வா யன்று நடைபெற்றது. சேலம் மாவட்ட தரக்கட்டுப்பாடு வேளாண்மை உதவி இயக்குநர் கௌதமன் முன்னிலை வகித்தார். வட்டார அட்மாக்குழு தலைவர் விஜயகுமார் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம், அயோத்தி யாப்பட்டினம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிக ளுக்கு 400 ஏக்கருக்கு பசுந்தாள் 50 சதவிகித மானியத்தில் வழங்கப்பட உள்ளது. இந்நிகழ்வில், வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) பாரதி, உதவி வேளாண்மை அலு வலர்கள், அட்மா திட்ட அலுவலர்கள், விவசாயிகள் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

லஞ்ச புகாரின் கைதான அதிகாரிகளை பணியிடைநீக்கம் செய்து ஆட்சியர் உத்தரவு

லஞ்ச புகாரின் கைதான அதிகாரிகளை பணியிடைநீக்கம் செய்து ஆட்சியர் உத்தரவு சேலம், ஜூன் 26- லஞ்சப் புகாரில் கைதான ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி கள் 2 பேரை சேலம் மாவட்ட ஆட்சியர் பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். சேலம் மாவட்டம், தலைவாசல், வரகூர் பகுதியில் சாலை  ஒப்பந்தப் பணிகளை செந்தில் என்பவர் மேற்கொண்டு வந்தார். இந்நிலையில், சாலை அமைக்க ஒப்பந்தத் தொகை யான ரூ.90 லட்சம் ஒதுக்கீடு செய்வதற்காக உதவி செயற் பொறியாளர் ரவிச்சந்திரன், இளநிலை வரைபட அலுவலர் சாகுல் ஹமீது ஆகியோர் ஒரு சதவிகிதம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு ஒப்பந்ததாரர் செந்தில் ரூ.50 ஆயிரம் தருவதாக ஒப்புக்கொண்ட நிலையில், மேலும் ரூ.61 ஆயிரம் தர வேண்டும் என வற்புறுத்தியுள்ளனர். இதற்கு சம்மதிக் காத செந்தில், லஞ்ச ஒழிப்பு காவல் துறையிடம் புகாரளித்தார். லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துணை கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜா, காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலகத் துக்கு வந்தனர். அப்போது ஒப்பந்ததாரர் செந்தில்குமார் ரசா யனம் தடவிய ரூ.61 ஆயிரத்தை ரவிச்சந்திரன், சாகுல் ஹமீ திடம் வழங்கும் போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு  துறையினர், அவர்களை கையும், களவுமாக பிடித்தனர். மேலும், அலுவலகத்தில் கணக்கில் வராமல் இருந்த ஒரு லட் சத்து 21 ஆயிரம் ரூபாயையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, உதவி செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், இள நிலை வரைபட அலுவலர் சாகுல் அமீது ஆகியோரை லஞ்ச  ஒழிப்பு காவல் துறையினர் கைது செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக ஊரக வளர்ச்சித்துறை சார்பில், மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தாதேவிக்கு அறிக்கை அளிக்கப்பட்டது. இதையடுத்து, ஊரக வளர்ச்சி முகமை அலு வலக உதவி செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், இளநிலை வரைபட அலுவலர் சாகுல் ஹமீது ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து ஆட்சியர் உத்தரவிட்டார்.

முதல்வருக்கு ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மனு

முதல்வருக்கு ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மனு திருப்பூர், 26- கரைப்புதூர் ஊராட்சியை திருப்பூர் மாநகராட்சியுடன் இணைக்கும் முடிவை கைவிட வலியுறுத்தி ஊராட்சி மன்றக்  கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தை, தமிழ் நாடு முதல் வர் மு.க.ஸ்டாலினுக்கு ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மனு வாக அனுப்பியுள்ளனர். இது குறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கரைப்புதூர் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் செவ்வாயன்று அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது, திருப்பூர் மாவட்டம், பல்லடம் ஒன்றியம், கரைப்புதூர் ஊராட்சியின் 2011 ஆம் ஆண்டு மற்றும் தற்போதைய மக்கள் தொகை,  பரப்பளவு மற்றும் 3 ஆண்டுகளுக்கான வரவு செலவு ஆகி யவற்றை கேட்டு திருப்பூர் மாநகராட்சி ஆணையரின் கடிதம்  பெறப்பட்டுள்ளது. திருப்பூர் மாநகராட்சியுடன் கரைப்புதூர் ஊராட்சியை இணைத்தால் பிரதான பணிகளான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், 15  ஆவது மத்திய, மாநில நிதிக் குழு மானியம், பிரதம மந்திரி  வீடு வழங்கும் திட்டம் போன்ற நலத்திட்டங்களை செயல்ப டுத்த முடியாத நிலை ஏற்படும். மேலும், ஊராட்சி பகுதியா னது 70 சதவீதம் விவசாய பகுதியாக உள்ளது. ஊராட்சியை  மாநகராட்சியுடன் இணைக்கும்போது வரியினங்கள் பல மடங்கு உயரும். எனவே, திருப்பூர் மாநகராட்சியுடன் கரைப்பு தூர் ஊராட்சியை இணைக்கும் திட்டத்தை கைவிடக்கோரி ஊராட்சி மன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கரைப்புதூர் ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்கும் முடிவை கைவிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

தொழில்முனைவோர் ஆலோசனைக்கூட்டம்

தொழில்முனைவோர் ஆலோசனைக்கூட்டம் திருப்பூர், ஜூன் 26- பின்னலாடை உற்பத்தியை தெலங்கானாவில் தொடங்கு வது தொடர்பாக அந்த மாநில தொழில்முனைவோர் ஆலோச னைக்கூட்டம் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில் செவ் வாய்க்கிழமை நடைபெற்றது.  திருப்பூரில் நடைபெறும் பின்னலாடை உற்பத்தியை தெலங்கானா மாநிலத்தில் தொடங்குவதற்கான ஆலோச னைகள் தொடர்பாக ஹைதராபாத் அருகே சிர்ஸில்லா நகரில்  இருந்து 24 தொழில் முனைவோர் திருப்பூர் வந்திருந்தனர்.  இவா்களுடனான ஆலோசனைக் கூட்டம் திருப்பூர் ஏற்றுமதி யாளர்கள் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில்,  திருப்பூரின் வர்த்தக வரலாறு, பின்னலாடை உற்பத்தி நடை பெறும் விதம், எத்தனை விதமான படிநிலைகளைக் கடந்து  பின்னலாடை உற்பத்தி வெற்றிகரமாக மேற்கொள்ளப்படுகி றது, தொழிலில் இருக்கும் சவால்கள், சிக்கல்கள், நன்மைகள் உள்ளிட்டவை குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, தெலங்கானாவை சேர்ந்த தொழில் முனைவோர் திருப்பூரில் உள்ள பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களைப் பாா்வையிட்டனர்.

பணம் கட்டி ஆன்லைனில் கேம்: தொடர் தோல்வியால் ஒருவர் தற்கொலை

பணம் கட்டி ஆன்லைனில் கேம்: தொடர் தோல்வியால் ஒருவர் தற்கொலை திருப்பூர், ஜூன் 26- தாராபுரத்தில் ஆன்லைனில் பணம் கட்டி கேம் விளையாடி யவர் ஒருவர், தொடர் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டார். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வடதாரை காமராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (32). இவருக்கு திருமண மாகி 3 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. தனியார் நிதி  நிறுவனத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன்  வழங்கும் பிரிவில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில்  மகளிர் சுய உதவி குழுவில் கடன் வாங்கும் பெண்கள் சரிவர  கடனை கட்டாததால், மன உளைச்சலில் இருந்துள்ளார். மேலும் நிதி நிறுவனத்தில் பணம் கட்டாததால் பிரகாஷின் ஊதி யம் பிடித்தம் செய்துள்ளனர். இதனால் குடும்ப செலவிற்கு  அக்கம் பக்கத்தில் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. கடனை அடைப்பதற்காக இணையத்தில் கிரிக்கெட் விளையாடி சம்பாதித்து விடலாம் என எண்ணி, தன்னிடம் உள்ள பணத்தை கட்டி ஆன்லைனில் கிரிக்கெட் விளை யாடி உள்ளார். மேலும், கடன் வாங்கியும் விளையாடி யுள்ளார். அதிலும் தோல்வி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தனது நண்பருக்கு கடன் அதிகமா னதால் கடன்காரர்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிக ரித்து வருகிறது. இதனால், குடும்பத்திலும் பிரச்சனை ஏற்பட் டுள்ளது. தனக்கு வாழ பிடிக்கவில்லை. அதனால் தற்கொலை  செய்து கொள்ளப்போவதாகவும், விஷம் அருந்தி விட்ட தாகவும் கூறியுள்ளார். மேலும் தான் இருக்கும் இடத்தையும்  லொகேஷன் மூலமாக அனுப்பியும் உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பிரகாஷின் நண்பர்கள் அவர் இருக்கும்  இடத்தை தேடி சென்று பார்த்துள்ளனர். அங்கு அவர் விஷம்  அருந்திய நிலையில் மயங்கி கிடந்துள்ளார். உடனடியாக அவரை தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக் காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்து வர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறிவிட்டனர். இதுகு றித்து தாராபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முழுமையான விசார ணைக்கு பின்னரே அவர் எவ்வளவு கடன் பெற்று உள்ளார்.  ஆன்லைனில் எவ்வளவு பணம் இழந்து உள்ளார் என்பது குறித்து தெரியவரும் என தெரிவித்தனர்.

நாட்டுக்கோழிப் பண்ணை அமைக்க 50 சதவீதம் மானியம்

நாட்டுக்கோழிப் பண்ணை அமைக்க 50 சதவீதம் மானியம்  ஈரோடு, ஜூன் 26- கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் ஈரோடு கிராமப்பு றங்களில் சிறிய அளவிலான நாட்டுக்கோழிப் பண்ணைகள் அமைக்க 50 சதவீதம் மானியம் வழங்கும் திட்டத்தில் பயன டைய தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக் கப்பட்டுள்ளது. இதுகுறித்து, ஈரோடு மாவட்ட ஆட்சியர் கூறியதாவது,  ஈரோடு மாவட்டத்தில் ஒரு பட்டியல் வகுப்பு அல்லது பழங்குடியி னர் உட்பட 3 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு  பயனாளிகளுக்கு நாட்டுக்கோழி வளர்ப்பு பண்ணைகளை நிறுவுவதற்கான கோழிக் கொட்டகை கட்டுமானச் செலவு, உப கரணங்கள் வாங்கும் செலவு (தீவனத் தட்டு மற்றும் தண்ணீர்  தட்டு) மற்றும் 4 மாதங்களுக்கு தேவையான தீவனச்செலவு ஆகியவற்றுக்கான மொத்த செலவில் 50 விழுக்காடு மானி யம் ரூ.1,56,875/- மாநில அரசால் வழங்கப்படும்.  திட்டத்தின் மீதமுள்ள 50 விழுக்காடு பங்களிப்பை வங்கி  மூலமாகவோ அல்லது தனது சொந்த ஆதாரங்கள் மூலமா கவோ பயனாளி திரட்ட வேண்டும். பயனாளி அந்த கிராமத் தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். விதவை கள், ஆதரவற்றோர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனா ளிகள், பட்டியல் வகுப்பு/பழங்குடியினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.  இத்திட்டத்தில் பயனடைய விருப்பமும் தகுதியும் உள் ளோர் ஆதார் அட்டை நகல், பண்ணை அமையவிருக்கும் இடத்திற்கான சிட்டா/அடங்கல் நகல், 50 விழுக்காடு தொகை  அளிப்பதற்கான ஆதார ஆவணங்கள், 3 வருடத்திற்கு பண் ணையை பராமரிப்பதற்கான உறுதிமொழியுடன் அருகி லுள்ள கால்நடை மருந்தகத்தை அணுகி 06.07.2024-க்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவித்துள்ளார்.  இத்திட்டத்தின் கூடுதல் விவரங்களுக்கு ஈரோடு கோட் டப் பகுதியைச் சேர்ந்தவர்கள் 94439 41443 என்ற அலை பேசி எண்ணிலும், கோபிசெட்டிபாளையம் கோட்டப் பகுதி யைச் சேர்ந்தவர்கள் 98427 59545 என்ற அலைபேசி எண்ணி லும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

லாரி மோதிய விபத்தில் ஒருவர் பலி

லாரி மோதிய விபத்தில் ஒருவர் பலி கோவை, ஜூன் 26- இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஆசிரியர்  மீது லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந் தார். கோவை மாவட்டம், உக்கடம் பகுதியில் இருந்து குனிய முத்தூரில் உள்ள நிர்மலா மாதா பள்ளிக்கு செவ்வாயன்று காலை பள்ளி ஆசிரியர் அனிதா தனது இருசக்கர வாகனத்தில்  சென்று கொண்டு இருந்தார். உக்கடம் லாரி அசோசியேசன் பெட்ரோல் பங்க் எதிரில் சென்று கொண்டு இருந்தபோது, லாரிப் பேட்டையில் இருந்து வந்த டிப்பர் லாரி ஆசிரியை அனிதா ஓட்டி வந்த இரண்டு சக்கர வாகனத்தின் மீது மோதி யது. சாலையில் தூக்கி எறியப்பட்ட அவர் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார்.  தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த உக்கடம் காவல் துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த  விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

தென்னை மரங்களை சேதப்படுத்திய யானை

தென்னை மரங்களை சேதப்படுத்திய யானை ஈரோடு, ஜூன் 26- புளியம்கோம்பையில் சொட்டுநீா் பாசன குழாய், தென்னை மரங்களை யானை சேதப்படுத்தியாதல் இழப்பீடு  வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள் ளனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகராட்சிக்கு உள்பட்ட  புளியம்கோம்பையைச் பகுதியை சேர்ந்தவர் பூலங்காடு பெரி யசாமி, இவரது சம்பங்கி பூந்தோட்டத்தில் தென்னை மரங்கள்  வளர்தது வருகிறார். மேலும், பூந்தோட்டத்தில் சொட்டுநீர் பாசன முறையில் குழாய் பதித்து விவசாயம் செய்து வரும்  நிலையில், தோட்டத்துக்குள் செவ்வாயன்று அதிகாலை புகுந்த யானை தென்னை மரங்களை சேதப்படுத்தியுள்ளது. மேலும், சொட்டுநீர் குழாய்களை உடைத்து சேதப்படுத்தி யுள்ளது. யானையால் ரூ.30 ஆயிரம் மதிப்பிலான பொருள்கள் சேத மடைந்துள்ளன. வனத் துறையினர் ஆய்வு செய்து இழப்பீடு  வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ள னர்.

10 நாட்டு வெடிகுண்டு பறிமுதல்
10 நாட்டு வெடிகுண்டு பறிமுதல் ஈரோடு, ஜூன் 26- சத்தியமங்கலம் அருகே வன விலங்குகளை வேட் டையாட பதுக்கிவைத்திருந்த 10 நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் செவ்வாயன்று பறிமுதல் செய்து இருவரை கைது  செய்தனா். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பக  வனப் பகுதியில் நாட்டு வெடிகுண்டுகளை பயன்படுத்தி வன விலங்குகளை வேட்டையாடும் கும்பல் சுற்றித்திரிவதாக சத்தி யமங்கலம் காவல்துறையினருக்கு செவ்வாயன்று தகவல்  கிடைத்தது. இதையடுத்து, சத்தியமங்கலம் போலீசார் வனப்  பகுதியை ஒட்டியுள்ள புளியங்கோம்பை கம்பத்துரா யன்புதூா் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப் போது, சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த இருவரி டம் விசாரணை மேற்கொண்டனர். அதில் பிடிபட்டவர்கள் கம்பத்துராயன் புதூரைச் சேர்ந்த  திருமன் (60), செந்தில்குமார் (48) என்பதும், இருவரும் சேர்ந்த  நாட்டு வெடிகுண்டுகளை பயன்படுத்தி வன விலங்கு களை வேட்டையாடி வந்ததும் தெரியவந்தது. இதைய டுத்து திருமன் மற்றும் செந்தில்குமாரைக் கைது செய்த  போலீசார் அவர்களது வீட்டின் பின்புறம் மறைத்துவைக்கப் பட்டிருந்த 10 நாட்டு வெடிகுண்டுகளைப் பறிமுதல் செய்த னர்.

வழிப் பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது

வழிப் பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது கோவை, ஜூன் 26- வடவள்ளி பகுதியில் கத்தியை காட்டி, மிரட்டி வழிப் பறி யில் ஈடுபட்ட இருவரை போலிசார் கைது செய்தனர். கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்த  வேணுகோபால் என்பவர் வடவள்ளி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பேக்கரி ஒன்றின் தேநீர் அருந்தி கொண்டு இருந் தார். அப்போது, அவ்வழியாக வந்த இரண்டு பேர் மது அருந்த  வேணுகோபாலிடம் பணம் கேட்டு உள்ளனர். என்னிடம் பணம்  இல்லை என்று கூறிய நிலையில், அந்த நபர்கள் கத்தியை  காட்டி மிரட்டி பணத்தை பறித்து சென்று உள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்டவர் கொடுத்த புகாரை அடுத்து வட வள்ளி போலீசார் விசாரணை மேற்கொண்டதில் வடவள்ளி,  தில்லை நகரை சேர்ந்த ராபட், மற்றும் பாரதி நகரை சேர்ந்த  அர்ஜுன் ஆகியோர் என்பது தெரியவந்தது. இதனைய டுத்து இருவரையும் கைது செய்த போலீசார் வழக்கு பதிவு  செய்து நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி சிறையில் அடைத்தனர்.

சாலை அமைக்க ரூ.61.30 கோடிக்கு ஒப்பந்தம்

ஈரோடு, ஜூன் 26- சாலைகள் மற்றும் மேம்பாலங்கள், அமைக்கும் பணிகளுக்காக ரூ. 61.30 கோடிக்கு ஒப்பந்தம் விடப்பட்டள்ளது. ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை புறவ ழிச் சாலையில் மேம்பாலங்கள் மற்றும் அணுகு சாலைகள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. சேலம்- கொச்சி தேசிய நெடுஞ்சாலை யில் சித்தோடு புறவழிச் சாலை சந்திப்பு, பெருந்துறை புறவழிச் சாலையில், காஞ்சிக் கோவில் சாலை சந்திப்பு மற்றும் துடுப்பதி சாலை சந்திப்பு ஆகிய மூன்று இடங்களில் மேம்பாலங்கள் அமைப்பது. பேரோடு செல்லப்பம்பாளையம் பிரிவு  முதல் சித்தோடு புறவழிச் சாலை சந்திப்பு  வரை இருபுறங்களிலும், பெருந்துறை ஆசிரி யர் குடியிருப்பு அருகே உள்ள மேம்பாலம் முதல் குன்னத்தூர் சாலை அருகே மேம்பா லம் வரை இருபுறங்களிலும், விஜயமங்க லம் புறவழிச் சாலையில் இருபுறங்களிலும் அணுகு சாலைகள் அமைக்கும் பணிக ளுக்காக ரூ. 61.30 கோடிக்கு ஒப்பந்தம் விடப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போது, மேம்பா லங்கள், அணுகு சாலைகள் அமைக்கும் பணி கள் தொடங்கப்பட்டுள்ளன.

பெட்ரோலிய நிறுவன அதிகாரிகள் விளக்கம்!

கோவை, ஜூன் 26- விளைநிலங்களில் பைப் லைன் பதிக்கும்  பணிகளால் விவசாயிகள் அச்சப்படத் தேவையில்லை என பாரத் பெட்ரோலியம் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  கோவை மாவட்டம் இருகூரிலிருந்து பெங்களூர் வரை எண்ணெய் குழாய்கள் அமைக்கும் பணியை பாரத் பெட்ரோலியம் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இத் திட்டத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித் துள்ளனர். இதுகுறித்து பாரத் பெட்ரோலியம் நிறு வன நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் கூறுகையில், 25 ஆண்டுகளுக்கு முன்பு கோவை இருகூரிலிருந்து முத்தூர் வரை  74 கிலோ மீட்டர்கள் எண்ணெய் பைப் லைன் விளைநிலங்கள் வழியாக பதித்து  கொண்டு செல்லப்பட்டது. இதற்காக 18  மீட்டர்கள் அகலத்துக்கு இடம் பயன்ப டுத்தப்பட்ட நிலையில் தற்போது அதே வழி யாக இருகூரிலிருந்து முத்தூர் வரை மற்றொரு பைப் லைன் அமைக்கப்பட உள் ளது. எனவே உரிய இழப்பீடு வழங்கப் படும், விவசாயிகள் அச்சப்பட தேவை யில்லை, என்றனர்.

ஜிஎஸ்டி மோசடி – பெண் கைது

ஜிஎஸ்டி மோசடி – பெண் கைது கோவை, ஜூன் 26- ஜிஎஸ்டி இழப்பு ஏற்படுத்தி விட்டு தலைமறைவாக இருந்த  பெண்ணை உத்திர பிரதேச மாநில போலீசார் மற்றும் கோவை  மாநகர போலீசார் இணைந்து கைது செய்தனர். உத்திர பிரதேசம் மாநிலத்தில் கடந்த நிதி ஆண்டில் ஆயி ரத்திற்கும் மேற்பட்ட போலி நிறுவனங்கள் இருப்பது போல  காண்பித்து ரூ.10 ஆயிரம் கோடி ஜிஎஸ்டி மோசடி நடை பெற்றது. இது தொடர்பாக அந்த மாநில குற்றத் தடுப்பு நட வடிக்கைப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்து இருந்தது.  இந்த தகவலின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து  விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில், போலி ஆவ ணங்கள் மூலம் அரசுக்கு ஜிஎஸ்டி இழப்பு ஏற்படுத்தியதாக டெல்லி, மத்திய பிரதேசம், ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட  மாநிலங்களை சேர்ந்த 45 பேர் மீது போலீசார் நடவடிக்கை  மேற்கொண்டனர். இந்நிலையில், கோவை மாவட்டத்தை சேர்ந்த சுகன்யா பிரபு (40) என்பவர் போலி ஆவணங்கள் மூலம்  அரசுக்கு ரூ.14.50 கோடி ஜிஎஸ்டி. இழப்பு ஏற்படுத்தியது தெரி யவந்தது. இந்நிலையில், அவர் திடீரென தலைமறைவாகி விட்டார். அதனால், அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாத  நிலை ஏற்பட்டது.  இதையடுத்து உத்தரப்பிரதேச மாநில போலீசார் சுகன்யா  பிரபு குறித்த தகவல்களை தெரிவிப்பவர்களுக்கு ரூ.25 ஆயி ரம் சன்மானம் வழங்கப்படுமென தெரிவித்தனர். இந்நிலை யில், அவர் கோவையில் ஒரு வீட்டில் பதுங்கி இருப்பதாக  உத்தரப்பிரதேச மாநில போலீசாருக்கு தகவல் கிடைத் தது. இதையடுத்து கோவை வந்த உத்திர பிரதேச மாநில போலீசார் கோவை பந்தய சாலை காவல் துறை உதவியு டன் சுகன்யாபிரபுவை திங்களன்று கைது செய்து உத்தர பிரதேசம் அழைத்துச் சென்றனர்.

‘பர்னிச்சர்’ கடையில் தீ விபத்து

‘பர்னிச்சர்’ கடையில் தீ விபத்து தருமபுரி, ஜூன் 26- தருமபுரியிலுள்ள தனியார் பர்னிச்சர் கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தருமபுரி, நேதாஜி சாலையில் பழைய கணேஷ் திரைய ரங்கம் அருகே தனியார் மரச் சாமான்கள் விற்பனை செய்யும் (பர்னிச்சர்) கடை உள்ளது. இந்நிலையில், செவ்வாயன்று இரவு வழக்கம்போல வேலை நேரம் முடிந்ததும் ஊழியர்கள் கடையைப் பூட்டிவிட்டுச் சென்றுள்ளனர். இதையடுத்து நள்ளிரவில் கடையிலிருந்து புகை வருவதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் கடை உரிமையாளருக்கும், தருமபுரி நகர தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், காற்று வேகமாக வீசியதால் தீ மளமளவென கடை முழுவதும் பரவியது. தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீவிபத்தில் கடையில் இருந்த கட்டில், பீரோ, நாற்காலி உள்ளிட்ட மர சாமான்கள் தீக்கிரையாகின.  இந்த விபத்து குறித்து தருமபுரி நகர காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்துக்கு மின் கசிவு காரணமாக இருக்கலாம் என சந்தே கிக்கப்படுகிறது.

போக்சோ வழக்கில் 10 ஆண்டுகள் சிறை 
போக்சோ வழக்கில் 10 ஆண்டுகள் சிறை  தருமபுரி, ஜூன் 26- சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தருமபுரி மாவட்ட சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியைச் சோ்ந்த வர் கார் ஓட்டுநர் ஜான் (37). இவருக்கும், தருமபுரி மாவட்டத் திலுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அந்தச் சிறுமியை, ஜான் வலுக்கட்டா யமாக காரில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து அந்தச் சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், அதியமான்கோட்டை காவல் துறை யினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, சிறுமி யை மீட்டனர். மேலும், சிறுமி கடத்தல், போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் ஜான் மீது வழக்குப்பதிவு செய்து, காவல் துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தரும புரி சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், விசாரணையில் குற்றச்சாட்டு உறுதியா னதால் செவ்வாயன்று நீதிபதி சிவஞானம், ஜானுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

மாணவர்கள் நலனுக்கான சவால்களை ஆசிரியர்கள் ஏற்க வேண்டும்

மாணவர்கள் நலனுக்கான சவால்களை ஆசிரியர்கள் ஏற்க வேண்டும் சேலம், ஜூன் 26- மாணவர்களின் நலனுக்கான சவால்களை, ஆசிரியர் கள் ஏற்றுக்கொண்டு செயல்பட வேண்டும் என சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காந்திகிராம பல்கலைக்கழக துணைவேந்தர் என்.பஞ்சநாதம் தெரிவித்துள்ளார். சேலம் பெரியார் பல்கலைக்கழக உள்தர மதிப்பீட்டு மையம் சார்பில், ‘தலைமைத்துவ சிறப்புக்கான நிர்வாக மேம்பாட்டிற்கு ஆசிரியர்களை ஆயத்தப்படுத்துதல்’ என்ற தலைப்பிலான சிறப்புக்கூட்டம் செவ்வாயன்று பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது. உள்தர மதிப்பீட்டு மைய இயக்குநர் யோகானந்தன் வரவேற்றார். பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஆர்.ஜெகநாதன் தலைமை வகித்தார். இந்நிகழ்வில் திண்டுக்கல் காந்திகிராம மத்திய பல்கலைக் கழகத் துணைவேந்தர் என்.பஞ்சநாதம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசுகையில், ஆசிரியராகப் பணியாற்றுவ தன் முக்கியத்துவத்தை முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் உணர்த்தியுள்ளார். அவர் பணிமாறுதல் பெற்றபோது, அவருடைய மாணவர்கள் பிரிவை ஏற்றுக் கொள்ளாமல் விடைபெற விடவில்லை. ரயில் நிலையம் செல்ல கொண்டு வரப்பட்ட குதிரை வண்டியில், குதிரைக ளைக்கூட மாணவர்கள் அவிழ்த்து விட்டனர். மறைந்த ராதாகி ருஷ்ணன் அவர்களின் பிறந்தநாள் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இப்பயிற்சித் திட்டத்தின் நோக்கம் அறியப்படாததைக் கற்றுக்கொள்வது அல்ல; ஏற்கெனவே உள்ளதை வலுப்படுத்துவதாகும். வெற்றிகரமான தலை வராக இருக்க வேண்டும் என்றால், நெறிமுறை ரீதியாக வலுவாக இருக்க வேண்டும் என்று வரலாறு ஒரு விஷயத்தை கற்றுக்கொடுக்கிறது. ஆசிரியர்கள் நிர்வா கத்தின் பொறுப்புகளை ஏற்பதன் மூலம், மாணவர்களின் நலனுக்கான சவால்களை ஏற்றுக்கொண்டு செயல்பட வேண்டும், என்றார். முடிவில், உள்தர மதிப்பீட்டு மைய துணை இயக்குநர் பூபதி நன்றி கூறினார்.

உதகை பூங்காவில் பச்சை ரோஜா 

உதகை பூங்காவில் பச்சை ரோஜா  உதகை, ஜூன் 26- உதகை ரோஜா பூங்காவில், பச்சை ரோஜா பூக்கத் துவங்கியுள்ளதால், சுற்றுலாப்பயணிகள் ஆர்வத்துடன் கண்டு மகிழ்ந்தனர். நீலகிரி மாவட்டத்தில், தற்போது மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இங்குள்ள ரோஜா தோட்டத்தில் பச்சை ரோஜாக்கள் தற்போது பூக்கத் தொடங்கியுள்ளன. இவ்வகையான பச்சை ரோஜாக்கள் பொதுவாக மே மாத கோடை சீசனில் பூக்கத் தொடங்கும். ஆனால், நடப்பு ஆண்டில் சற்று தாமதமாக ஜூன் மாதத்தில் பூக்கத் தொடங்கி யுள்ளன. உதகை ரோஜா தோட்டத்தில் பூத்துக் குலுங்கும் இந்த பச்சை ரோஜாக்களை சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்து புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.

பள்ளிக்கு சென்ற மாணவி உயிரிழப்பு

பள்ளிக்கு சென்ற மாணவி உயிரிழப்பு நாமக்கல், ஜூன் 26- ராசிபுரம் அருகே பள்ளிக்கு சென்ற 6 ஆம் வகுப்பு மாணவி, மயக்கமடைந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள புதுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் (47). இவரது மகள் தனிஷ்கா (11) புதுப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், புதனன்று மாணவி வழக்கம் போல் காலையில் பள்ளிக்கு சென்றார். அப்போது, இடைவெ ளிக்குச் சென்ற மாணவி, பள்ளியில் மயக்கமடைந்து விழுந்த தாக கூறப்படுகிறது. இதன்பின் ஆசிரியர்கள், மாணவியை மீட்டு சிகிச்சைக்காக அருகாமையில் உள்ள வடுகம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் மாணவிக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக ராசிபுரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாண வியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதன்பின் மாணவியின் உடல்  பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனை யில் வைக்கப்பட்டுள்ளது. மாணவி இறந்த துக்கம் தாங்கா மல் மருத்துவமனையில் பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறுத்தை நடமாட்டம்: வாகன ஓட்டிகள் அச்சம்

சிறுத்தை நடமாட்டம்: வாகன ஓட்டிகள் அச்சம் ஈரோடு, ஜூன் 26- திம்பம் மலைப் பாதையின் குறுக்கே ஓடிய சிறுத்தை யால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள 10 வனச் சரகங்களில் புலி, சிறுத்தை, யானை, மான்,  கரடி, காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன.  இந்த புலிகள் காப்பகத்தில் மத்தியில் திம்பம் மலைப்பாதை செல்கிறது. இந்நிலையில், கர்நாடகத்தில் இருந்து தமிழகம் நோக்கி வந்த கார் திம்பம் மலைப் பாதையின் 17-ஆவது வளைவில் திரும்பும்போது சாலையோரம் நின்றிருந்த சிறுத் தையை பார்த்த ஓட்டுநர் காரை நிறுத்தியுள்ளார். அப்போது,  பக்கவாட்டில் இருந்து தடுப்புக் கம்பியை தாண்டி சாலை யில் குதித்து எதிர்திசையில் சிறுத்தை சென்றது. இந்தக் காட்சியை வாகன ஓட்டி கைப்பேசியில் பதிவு செய்து சமூக  வலைதளங்களில் பகிா்ந்துள்ளார். சாலையோரம் சிறுத்தை  நடமாடுவதால் வாகன ஓட்டிக் திம்பம் மலைப் பாதையில் வாக னங்களை நிறுத்தி கீழே இறங்க வேண்டாம் என வனத் துறை யினர் எச்சரித்துள்ளனர்.