கோவை, ஜூன் 20– தனிநபர்களின் போக்குவரத்து அதிகரிப்பால் காலநிலையில் மாற் றம் ஏற்படுகிறது. பொதுபோக்கு வரத்தை பயன்படுத்துவதே சூழலை (உலகை) பாதுகாக்க முடியும் என சிஐடியு அரசு போக்குவரத்து மாநில மாநாட்டு கருத்தரங்கில் தலைவர்கள் உரையாற்றினர். தமிழ்நாடு அரசு போக்குவ ரத்து ஊழியர் சங்கத்தின் 15 ஆவது மாநில மாநாடு கோவையில் நடை பெற்று வருகிறது. இம்மாநாட்டின் பொது நிகழ்வாக திங்களன்று மசக்காளிபாளையம் சாலையில் உள்ள ஹர்சா மஹாலில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. சிஐ டியு அரசு விரைவு போக்குவரத்து சங்கத்தின் பொதுச்செயலாளர் எம். கனகராஜ் தலைமையில் நடை பெற்ற கருத்தரங்கில் மாநாட்டு வர வேற்புக்குழு செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி அனைவரையும் வரவேற்றார். இதில் மோட்டார் வாகன சட்ட திருத்தமும், பொது போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள தாக்கங்களும் குறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங் கத்தின் பொதுச்செயலாளர் கே.ஆறுமுகநயினார், உலகின் பொது போக்குவரத்து முக்கியத் துவமும் தமிழகம் செய்ய வேண்டி யதும் என்கிற தலைப்பில் பன் னாட்டு பொது போக்குவரத்து நிபு ணர் வி.அமுதன் மற்றும் சுற்றுச் சூழலை பாதுகாக்க உலக வெப்ப மயமாக்கலை தடுக்க, பொது போக்குவரத்து என்கிற தலைப் பில் பூவுலகின் நண்பர்கள் அமைப் பின் கே.சுந்தரராஜன் ஆகியோர் கருத்துரையாற்றினர்.
முன்னதாக அரசு போக்கு வரத்து ஊழியர் சங்கமும், காம்ரேட் டாக்கீஸ் இணைந்து தயாரித்த தமிழ்நாடு இன்ஜின் என்கிற ஆவ ணப்படத்தை சிஐடியு தமிழ் மாநில தலைவர் அ.சவுந்திரராசன் வெளியிட்டார். இக்கருத்தரங்கில் தலைவர் கள் பேசுகையில், உலக அளவில் கார்பன் உமிழ்வு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கி றது. இவ்வாறு நடக்கும் பட்சத்தில் 2020க்கு பிறந்த ஒரு குழந்தை, தனது பெற்றோர் தன் வாழ்நாள் முழுவதும் சந்தித்த பேரிடரை, அந்த குழந்தை 2 ஆண்டுகளுக்கு பிறகு சந்திக்கும் என்று ஐநா சபை யின் காலநிலை மாற்றத்திற்கான அமைப்பு வெளியிட்டுள்ளது. இவ் வமைப்பு 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியிடப்படும் மதிப் பீட்டுக்கான அறிக்கையில் இவ் வாறு தெரிவித்துள்ளது. மேலும், இந்த காலநிலை மாற்றத்தினால் பென்குவின் போன்ற இனங்கள் தொடர்ந்து அழிந்து வருகிறது.
உலகம் முழுவதும் தனிநபர்களின் போக்குவரத்து அதிகரித்து வரு வதே காலநிலை மாற்றத்திற்கான காரணம். கடந்த 20 ஆண்டுகளில் தனிநபர்களின் வாகனங்கள் பல மடங்கு அதிகரித்துள்ளது. பொது போக்குவரத்துக்கான வாகனங்க ளில் அளவைவிட இது 20 சதவிகி தம் அதிகமாகும். எனவே, பொது போக்குவரத்தை பயன்படுத்தும் போது, கார்பன் உமிழ்வு குறை யும். சுற்றுச்சூழலை காப்பதற்கு பொது போக்குவரத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை, பயோ டீசல், எத்தனால், எலக்ட்ரிக் போன்ற மாற்று எரிபொருட்களை பயன் படுத்தும் போது பொது போக்கு வரத்து லாபத்தை நோக்கி நக ரும். காலநிலை மாற்றத்திற்கான காரணியாக மாற்றாமல், வெளி நாடுகளில் பொது போக்குவரத்து பயன்படுத்தப்படுகிறது. மேலும், இந்தியாவின் முக்கிய நகரங்க ளில் பொதுபோக்குவரத்தை பயன் படுத்துவதன் மூலம் புதுப்பிக்க முடியாத நிலையில் உள்ள எரி பொருட்களை பாதுகாக்க முடி யும். பொது போக்குவரத்தை மேம் படுத்துவதற்கு நிரந்தர ஆலோச கரை தமிழக அரசு நியமிக்க வேண் டும். தேவைக்கேற்ப வாகனங் களை இயக்க வேண்டும். பயணி களின் வசதி மற்றும் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும். போக்கு வரத்து துறையில் 50 சதவிகிதம் பெண் தொழிலாளர்களை ஈடு படுத்த வேண்டும் உள்ளிட்ட பொதுபோக்குவரத்தை பலப்படுத் துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து உரையாற்றினர்.