நாகர்கோவில் ஜன.8- கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. வெள்ளியன்று மாவட்டத்தில் மொத்தம் 108 பேர் வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது வரையிலும் 60 ஆயிரத்து 888 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில தினங்களாக மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரு கின்ற நிலையில், பாதிக்கப்படுப வர்கள் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இதையடுத்து அங்குள்ள கொரோனா தனி பிரிவிலுள்ள படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஆசாரிப் பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் அங்குள்ள வசதிகள் குறித்து மருத்துவ குழுவின ருடன் கேட்டறிந்தார். பின்னர் அங்குள்ள பிராணவாயு உற்பத்தி மையத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தற்பொழுது தினமும் நோயா ளிகளுக்கு எவ்வளவு பிராண வாயு வழங்கப்பட்டு வருகிறது மற்றும் அதன் இருப்பு குறித்த விவரத்தையும் கேட்டார். இதைத் தொடர்ந்து ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள கொரோனா படுக்கைகளை பார்வையிட்டார். அங்கு போடப்பட்டிருந்த படுக் கைகள் மற்றும் வெண்டிலேட்டர் படுக்கைகள் குறித்த விவரங் கள், ஏற்கனவே சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு அளிக் கப்பட்டு வரும் சிகிச்சை முறை குறித்தும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு கேட்டறிந்தார். தேவையான அளவு படுக்கை களை தயார் நிலையில் வைத்தி ருக்குமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.