கோவை, பிப்.12- கோவையில் பழங்குடி கிராமங்களுக்கு உதவ நிதி திரட்டும் வகையில், ‘பிக்கி மகளிர் அமைப்பு’ சார்பில், ஆடம்பர மற்றும் வாழ்க்கை முறை என்ற தலைப்பில் ஆடை, அணிகலன்கள், கைவினைப் பொருட்கள் கண்காட்சி நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் சுமார் 13 ஆயிரம் உறுப் பினர்களுடன் செயல்பட்டு வரும் பிக்கி மக ளிர் அமைப்பு, மகளிர் மேம்பாட்டிற்கான பணி களை செய்து வருகிறது. இந்நிலையில், இந்த அமைப்பின் கோவை அத்தியாயம் சார்பில், ஆனைக்கட்டி பழங்குடி கிராம மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை மேற்கொள்ள தனி யார் நிறுவன பங்களிப்போடு, ஆடம்பர மற் றும் வாழ்க்கை முறை கண்காட்சியை புத னன்று துவங்கினர். கோவை - அவினாசி சாலையில் உள்ள ரெசிடென்ஸி ஹோட்டலில் துவங்கிய இந்த கண்காட்சி வரும் 2 நாட்க ளுக்கு நடைபெற உள்ளது. இக்கண்காட்சி யில் விலை உயர்ந்த ஆடை, அணிகலன்கள், கைவினைப் பொருட்கள், பிரத்யோக கைவினை தயாரிப்பு மற்றும் வடிவமைப் பாளர்களின் ஸ்டால்களும் அமைக்கப்பட் டுள்ளது. 5 ஆவது ஆண்டாக நடைபெற்று வரும் இந்த கண்காட்சி மூலம் பெறப்ப டும் வருவாய் முழுமையாக கோவை, ஆனைக்கட்டி பழங்குடி கிராம மக்களுக்கு தேவையான பணிகளை மேற்கொள்ள உள்ள தாகவும், பழங்குடி பெண்கள் சுய தொழில் முன்னேற்றத்திற்கான பயிற்சிகளை வழங்க உள்ளதாக, அவ்வமைப்பினர் தெரிவித்துள் ளனர்.