தருமபுரி, ஜன.23- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற உள்ள போராட்டங்கள் குறித்து நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு விளக்கக் கூட்டம் நடைபெற்றது. 1.4.2003க்கு பிறகு அரசுப்பணியில் சேர்ந்தோருக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கால வரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண்விடுப்பு ஒப்ப டைப்பு, உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகிய வற்றை உடனடியாக வழங்க வேண்டும். இடைநிலை ஆசிரி யர்கள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஒன்றிய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படாமல் இழைக்கப்பட்டு வரும் அநீதி களைய வேண் டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெற்றுவரும் ஊழியர்க ளுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ சார்பில் ஜன.30 ஆம் தேதியன்று தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற உள் ளது. இப்போராட்டம் குறித்த விளக்கக் கூட்டம் நல்லம்பள்ளி வட் டார வளர்ச்சி அலுவலகம் முன்பு செவ்வாயன்று நடைபெற் றது. இந்நிகழ்விற்கு அரசு ஊழியர் சங்க வட்டத் தலைவர் யாரப்பாஷா தலைமை வகித்தார். இதில் அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் கோ.பழனியம்மாள், மாவட்டச் செயலாளர் ஏ.சேகர், பொருளாளர் பி.எஸ்.இளவேனில், ஜாக்டோ - ஜியோ நிதி காப்பாளர் புகழேந்தி, மாவட்ட நிர்வாகி கள் குணசேகரன், ஜெயவேல், முன்னாள் நிர்வாகி காவேரி, வட்டச் செயலாளர் முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.