தருமபுரி, பிப்.14- தேர்தல் வாக்குறுதிப்படி, பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், என வலியு றுத்தி ஜாக்டோ - ஜியோ சார்பில் வெள்ளியன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 2003 ஆம் ஆண்டு ஏப்.1 ஆம் தேதிக்கு பிறகு அரசுப்பணியில் சேர்ந்தோருக்கு தற்போது நடை முறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தினை கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காலவரையின்றி முடக்கி வைக்கப் பட்டுள்ள சரண்விடுப்பு ஒப்படைப்பு, உயர் கல் விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும். தொடக்க கல் வித்துறையில் பணிபுரியும் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பாதிப்பினை ஏற்ப டுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள பள்ளிக் கல்வித்துறை அரசாணை எண்.243யை ரத்து செய்ய வேண்டும். ஊதிய முரண்பாட்டினை களைய வேண்டும். கல்லூரி பேராசிரியர்க ளுக்கான நிலுவையிலுள்ள பணிமேம்பாடு, ஊக்க ஊதிய உயர்வு உடனடியாக வழங்க வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதி யம் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும், என வலியுறுத்தி ஜாக்டோ – ஜியோ சார்பில் வெள் ளியன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர் எம்.சுருளி நாதன் தலைமை வகித்தார். இதில் ஆசிரி யர் முன்னேற்ற சங்க மாவட்டத் தலைவர் பி.எம். கெளரன், ஜாக்டோ - ஜியோ மாவட்ட நிதி காப் பாளர் கே.புகழேந்தி, அரசு பணியாளர் சங்க மாநில துணைத்தலைவர் பாஸ்கரன், ஆசிரியர் கூட்டணி மாவட்டத் தலைவர் சாமிநாதன், தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலாளர் கோ.காமராஜ், அரசு கல்லூரி ஆசிரியர் கழக மண்டலத் தலைவர் சிவப்பிரகாசம், பதவி உயர்வுபெற்ற முதுக லைப் பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டத் தலை வர் முருகேசன், முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்டத் தலைவர் சக்திவேல், உயர் நிலை, மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டத் தலைவர் துரைராஜ், பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர் கழக மாவட்டத் தலைவர் ராஜசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கோவை
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளா கத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் செந்தில் குமார் தலைமை வகித்தார். சூலூரில் அரசு ஊழி யர் சங்க மாவட்டத் தலைவர் ச.ஜெகநாதன் தலைமையேற்றார், இதேபோன்று, பொள் ளாச்சி, பேரூர், மேட்டுப்பாளையம், வால்பாறை, சூலூர், மதுக்கரை, அன்னூர் ஆகிய பகுதிகளி லுள்ள வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதில், தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் சி.அரசு, அரசு பணியா ளர் சங்க மாவட்டச் செயலாளர் ராதாகிருஷ் ணன், ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் மா.ராஜசேகரன், மேல்நிலைப்பள்ளி கணினி ஆசிரியர் சங்க மாவட்டத் தலைவர் மு.கலை வாணன் ஆகியோர் தலைமையேற்றனர்.
ஈரோடு
ஈரோடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ச.விஜய மனோகரன் தலைமை வகித்தார். இதில் ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் பி.சர வணன், பி.எஸ்.வீராகார்த்திக், அ.மதியழகன், அ.ஆறுமுகம், பி.வெங்கடேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். நம்பியூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, வட்டார ஒருங்கிணைப்பாளர் ரா.கருப்பு சாமி தலைமை வகித்தார். ஆரம்பப்பள்ளி ஆசிரி யர் கூட்டணியின் மாநில செயற்குழு உறுப்பினர் ஜெ.அருள் சுந்தரரூபன் உட்பட பலர் கலந்து கொண்டனர். சேலம் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளா கத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் நா.திருவரங் கன் தலைமை வகித்தார். இதில் வருவாய்த் துறை அலுவலர் சங்க மாநில துணைத்தலைவர் வி.அர்த்தனாரி, தொழிற்பயிற்சி அலுவலர் சங்க மாநிலப் பொருளாளர் என்.திருநாவுக்கரசு, மாநில துணைத்தலைவர் சி.முருகப்பெருமாள், பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்க மாநி லப் பொருளாளர் வி.செல்வம், மாவட்ட நிர்வாகி பெரியசாமி, சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட துணைத்தலைவர் லட்சுமி, மகளிர் துணைக்குழு ஒருங்கிணைப்பாளர் ராணி, மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் கோவிந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.