கோவை, ஜூலை 1- கோவையில் மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையை ஜூலை 15ல் தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்படும் எனவும், நான்கு வழிச்சாலைகளில் இத்திட்டம் செயல்படுத்த உள்ள தாகவும், முதற்கட்டமாக அவிநாசி சாலை மற்றும் சத்தியமங்கலம் சாலையில் இருவழிச்சாலைகளில் இத்திட்டம் துவங்கப்படும் என மெட்ரோ அதிகாரிகள் தெரிவித் தனர். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்துவது குறித்த ஆலோசனை மற்றும் ஆய்வுக்கூட்டம் சனியன்று நடை பெற்றது. சிறப்பு திட்டங்கள் செய லாக்கத்துறை அரசு தலைமை கூடுதல் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா மற்றும் அரசு முதன்மை செயலாளர், மெட்ரோ பணிகள் மேலாண்மை இயக்குநர் சித்திக் ஆகியோர் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத் தில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, கோவை மாந கராட்சி ஆணையர் மு.பிரதாப் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற் றனர். இதனைத்தொடர்ந்து, மெட்ரோ அதிகாரிகள் ரமேஷ் சந்த் மீனா மற்றும் சித்திக் ஆகியோர் செய்தி யாளர்களை சந்தித்து கூறுகை யில், கோவை மாவட்டத்தில் மெட் ரோ ரயில் திட்டம் 4 வழிச்சாலை களில் அமைக்கப்படுகிறது. முதற் கட்டமாக அவிநாசி சாலை மற்றும் சத்தியமங்கலம் சாலையில் பணி கள் துவங்கப்படும். தமிழ்நாடு அரசு நடப்பு நிதியாண்டின் பட்ஜெட் கூட்ட தொடரில், கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ. 9000 கோடி மதிப்பில் செயல்படும் என அறிவிப்பின் படி, வரைவு விரி வான திட்ட அறிக்கை முழுமை யாக தயாராகி உள்ளது. அதன்படி கோவையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், துறை சார்ந்த அதிகாரிகள் பங் கேற்று கருத்துகளை முன்வைத் தனர். வருகிற ஜூலை 15 ஆம் தேதி மெட்ரோ ரயில் திட்டம் குறித்து அறிக்கை அரசிடம் சமர்பிக்கப் படும். திட்டத்தில் இரு வழிச்சாலை களிலும 2 உயர்மட்ட பாலம் அமைத்து மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்.
இதில், அவிநாசி சாலையில் 17.4 கி.மீ, தூரம் பாதை அமைக் கப்படும், இதில், 17 ரயில் நிலை யங்கள் அமைக்கப்பட உள்ளது, சத்தி சாலையில் 16 கி.மீ, 14 ரயில் நிலையங்கள் என மொத்தம் 32 ரயில் நிலையங்கள் கொண்டு வர திட்டம் உள்ளது. மெட்ரோ ரயில் பயணிகளின் போக்குவரத் திற்கு 3 கோச்கள் கொண்ட மெட்ரோ ரயில் பெட்டிகள் அமைக்கப்படும். ஒரு கோச்சில் சுமார் 250 பேர் முதல் 300 வரை பயணம் செய்ய முடியும். ஒன்றரை ஆண்டுகளில் மெட்ரோ ரயில் திட்டம் துவங்க வாய்ப்பு உள்ளது. அவிநாசி சாலை மற்றும் சத்தியமங்கல சாலையில் நில எடுப்பு பணிகள் மேற்கொள்ளப் படும். கோவை மத்திய ரயில் நிலையம் இரு வழி தடங்களை இணைக்கும் இடமாக இருக் கும் என்றும் மெட்ரோ ரயில் திட்ட பணிமனை எல் அண்ட் டி பைபாஸ் சாலையில் அமைக்கப்படும். இத் திட்டத்தை செயல்படுத்த தோராய மாக 35 ஏக்கர் வழிதடங்களுக் காகவும், 40 ஏக்கர் பணிமனைக்கா கவும் எடுக்கப்பட உள்ளது என் றார். கோவை மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பாக உள்ள மெட்ரோ ரயில் திட்டத்திற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வருவது கோவை நகர மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.