districts

img

ஆனைமலை புலிகள் காப்பகம் சார்பில் சர்வதேச பல்லுயிர் பரவல் தினம் - வனவிலங்குகள் பொறித்த நாணயங்கள் கண்காட்சி

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட டாப்சிலிப் பகுதியில் வனத்துறை சார்பில் சர்வதேச பல்லுயிர் பரவல் தினத்தை முன்னிட்டு வனவிலங்குகள் படம் பொறித்த உலக நாணயங்கள் கண்காட்சி நடைபெற்றது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட டாப்சிலிப் பகுதியில் சர்வதேச பல்லுயிர் பரவல் தினம் கடைபிடிக்கப்பட்டது. இந்நிகழ்வில் வன விலங்குகள் படம் பொறிக்கப்பட்ட  உலக அலவிலான பழைய மற்றும் புதிய உலக நாணயங்கள் கண்காட்சி நடைபெற்றது. மேலும் பழங்குடி மக்களின் கைகளால் தயார் செய்யப்பட்ட கால்மிதிகளை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன்  வாங்கிச் சென்றனர்.  நடைபெற்ற   இந்நிகழ்ச்சியை  ஆனைமலை புலிகள் காப்பகம் ஒருங்கிணைத்திருந்தது.

இதில்  துணை இயக்குனர் மற்றும் கின்னஸ் சாதனையாளர் முரளி உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.

இதில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டு கண்காட்சியை கண்டுகளித்தனர். மேலும் பழங்குடி மக்களின் கைவினைப்பொருள் தயாரிப்புகளை ஆர்முடன் வாங்கிச் சென்றனர்.

;