districts

img

அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களை ஒன்றிணைத்திடுக!

கோவை, பிப்.21- அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங் களை ஒன்றாக இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி, அரசு பொது இன்சூ ரன்ஸ் நிறுவனங்களின் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழுவினர் அடை யாள தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட னர். ஒன்றிய அரசு கடந்த 2022 ஆம்  ஆண்டு முதல் வழங்க வேண்டிய ஊதிய  உயர்வை வழங்க வேண்டும். அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களை ஒன்றாக இணைக்க வேண்டும். அனைத்து காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஒன்றிய பாஜக அரசை கண்டித்து அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்க ளின் தொழிற்சங்கங்கள் கூட்டுக் குழு வினர் நாடு முழுவதும் தர்ணா போராட் டத்தில் ஈடுபட்டனர்.  அதன் ஒரு பகுதியாக கோவை நஞ் சப்பாசாலையில் உள்ள யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மண்டல அலுவலகம் வளாகத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அடுத்தக்கட்டமாக வரும் 28 ஆம் தேதி  நாடு முழுவதும் 1 மணி நேரம் வேலை  நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள் ளதாக தெரிவித்தனர்.