districts

img

மிஸ் ஆஸ்திரேலியா பட்டத்தை வென்ற இந்தியப் பெண்

மெல்போர்ன், ஜூன் 28- மெல்போர்னில் வியாழனன்று இரவு நடந்த அழகிப்போட்டியில் இந்தியப் பெண் பிரியா செராயோ (26) மிஸ் ஆஸ்திரேலியா 2019 பட்டம் வென்றார்.  விரைவில் நடைபெற உள்ள மிஸ்யுனிவர்ஸ் அழகி போட்டிக்கு ஆஸ்திரேலியாவின் சார்பாக பங்கேற்க உள்ளார்.  போட்டியில் வென்ற பிரியா, இதற்கு முன்னதாக எந்த ஒரு போட்டியிலும் கலந்தது கிடையாது. மாடலிங் செய்தது கிடையாது. மிஸ் ஆஸ்திரேலியா பட்டம் வென்றது பெரிய ஆச்சரியம் அளிக்கிறது” எனக் கூறினார். சட்டம் படித்துள்ள பிரியா மெல்போர்னில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.