சேலம், செப்.1- எச்ஐவி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வித மாக, அஸ்தம்பட்டியில் ஞாயிறன்று மாரத்தான் போட்டி நடைபெற்றது. தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு நிறுவனத்தின் வழிகாட்டு தலின்படி, சேலம் மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள் மத்தியில் எச்ஐவி பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத் தும் விதமாக, ஆக.12 முதல் அக்.12 ஆம் தேதி வரை மாவட்டம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகை யில், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலுவ லகத்தின் வாயிலாக, 17 வயது முதல் 25 வயதுள்ள கல்லூரி மாணவர்கள் மற்றும் செஞ்சுருள் சங்க மாண வர்கள் (Red Ribbon Club) கலந்து கொண்ட 5 கி.மீ தொலைவிலான மாரத்தான் ஓட்டயப்பந்தயம் ஞாயி றன்று நடைபெற்றது. சேலம் அஸ்தம்பட்டி ஆயுதப்படை பயிற்சி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியினை சேலம் வருவாய் கோட்டாட்சியர் அ.அபிநயா தொடங்கி வைத்தார். இந்த ஓட்டமானது டிஐஜி அலுவலகம், மத்திய சிறைச்சாலை பின்புறம், அம்மா உணவகம், அஸ்தம்பட்டி ரவுண்டானா, டிஐஜி அலுவலகம் ஆகிய வழித்தடங்களில் நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் மற்றும் விளை யாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சுகாதாரப்பணிகள் இணை இயக்குநர் (பொ) ராதிகா, துணை இயக்குநர் சவுண்டம்மாள், மாநகர நல அலுவலர் மோகன், மாவட்ட திட்ட மேலாளர் அருணாச்சலம், மத்திய சிறை கண்காணிப்பாளர் வினோத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.