திருப்பூர், ஜூன் 3 - திருப்பூர் டாக்டர் கலைஞர் பேருந்து நிலையம் எதிரில் உள்ள தேசிய நெடுஞ்சா லையில், பாலத்திற்கு கீழ் பகுதியில் வாகனங் களை நிறுத்த மாநகராட்சி கட்டணம் வசூலிப் பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுஞ்சாலைத் துறையினர் கட்டண பலகையை அகற்றிச் சென் றனர். திருப்பூர் டாக்டர் கலைஞர் பேருந்து நிலையம் எதிரே தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. பாலத்திற்கு கீழ்ப்பகுதியில் உள்ள காலி இடத்தில் வாகன நிறுத்தமாக பயன்படுத்தவும், அதற்கு கட்ட ணம் வசூலிக்கவும் மாநகராட்சி நிர்வாகம் தீர் மானித்தது. மாமன்ற கூட்டத்தில் நெடுஞ்சாலையில் வாகனம் நிறுத்த கட்டணம் வசூலிப்பதற்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவித் தது. எனினும், அந்த இடத்தில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலித்துக் கொள் வதற்கு மாநகராட்சி நிர்வாகம் ஏலம் நடத்தி யது. இதனை தொடர்ந்து குத்தகைதாரர் ஒருவர் ஆண்டுக்கு ரூ. 4 லட்சம் என குத்தகைக்கு பெற்றார். மாமன்ற கூட்டத்தில் இதற்கு அனு மதி அளிக்கப்பட்டது. எனவே, குத்தகை தாரர் இந்த இடத்தில் சாலை மையப்ப குதியில் இருந்து தடுப்பில் வாகன நிறுத்த கட்டண விபரங்களையும் தகவல் பலகை யாக வைத்திருந்தார். குத்தகைதாரர் வாகன நிறுத்த கட்ட ணம் வசூலிக்க துவங்கிய நிலையில், சனி யன்று நெடுஞ்சாலை துறை சார்பில், மாநக ராட்சி நிர்வாகம் வாகன நிறுத்த கட்டணம் வசூ லிக்க தீர்மானத்திற்கும் இடம் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமானது. எனவும் இங்கு மாந கராட்சி நிர்வாகம் கட்டணம் வசூலிக்க அனும திக்க முடியாது என எதிர்ப்பு தெரிவித்துள் ளனர். மேலும், அந்த இடத்தில் வைக்கப் பட்டிருந்த வாகன நிறுத்த கட்டண போர்டுக ளையும் அகற்றி எடுத்துச் சென்றனர். குத்த கைதாரர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித் ததால் இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.