districts

img

ஜிஎஸ்டி கட்டியே மாய்ந்து போகும் நிலைமை உள்ளது அமைச்சர் மனோ தங்கராஜ் வேதனை

கோவை, ஜூலை 13- அனைத்து பொருட்களுக்கும் ஜிஎஸ்டி  வரி கட்டியே மாய்ந்து போகும் நிலைமையில்  நாம் உள்ளதாக கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வேதனையுடன் தெரிவித் துள்ளார். கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் அருகே பச்சாபாளையம் பகுதியில் உள்ள மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய பால்பண்ணையினை தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்க ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டார். அப்போது, அங்குள்ள இயந்தி ரங்களின் செயல்பாடுகள், அவற்றின் பரா மரிப்பு ஆகியவற்றை ஆய்வு செய்தார். மேலும், பால் பதப்படுத்தப்பட்டு பாக்கெட் டிங் செய்யப்படுவதையும் ஆய்வு செய்து, பணியாளர்களிடமும் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். அதனைத்தொடர்ந்து சிறந்த  பால் உற்பத்தியாளர்கள், சங்க செயலா ளர்கள், கருவூட்டுநர்கள் மற்றும் விற்பனை யாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங் கினார். அதன்படி 124 பயனாளிகளுக்கு ரூ. 2.23 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கப் பட்டன. இந்நிகழ்வில் அமைச்சர் மனோ தங்க ராஜ் பேசுகையில், ஆவின் ஒரு மிகப்பெரிய  பொதுத்துறை நிறுவனம். இதன் மூலம் பல ருக்கும் நன்மைகள் உள்ளன. இத்துறை யில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம்.  ஆவினை பொருத்தவரை, விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும். காப்பீடு திட்டத்திலும் ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொண்டு வருகிறோம். யார் வேண்டுமென்றாலும் ஆவின் நிர்வாகி களை சந்தித்து பேசலாம். அதிகாரிகள் உங்க ளுக்கு முறையாக வழிக்காட்டுவார்கள் என்ற  உத்தரவாதத்தை இத்துறையின் அமைச்ச ராக நான் உறுதியளிக்கிறேன். விவசாயிகள் தரும் பாலுக்கு விலையை கூட்டி தர வேண்டும் என கூறுவதில் நியாயம் இருப் பதை மறுக்கவில்லை. தற்போது அனைத் திற்கும் ஜிஎஸ்டி போட்டு வரி கட்டியே மாய்ந்து போன நிலைமையில் நாம் இருக் கிறோம். எங்கெல்லாம் பால் உற்பத்தியாளர்கள் இருக்கிறார்களோ, அங்கெல்லாம் சொசைட்டி ஆரம்பிக்கும் பணிகளை மேற் கொள்ள உள்ளோம். நாம் எடுத்துள்ள முயற்சி களால் 6 சதவிகிதம் மின் கட்டணம் குறைந் துள்ளது. ஒரு சாரர் மட்டும் பயனடைந்தார்கள் என்று இருக்கக்கூடாது என்பது தான் இந்த  அரசின் கொள்கை. ஒப்பந்த பணியாளர் களுக்கு குறைந்தபட்ச ஊதியம் எவ்வளவு வழங்கலாம் என்பதை ஆராய்ந்து வரு கிறோம். அனைவரும் இணைந்து இந்த  பொதுத்துறையை வலுப்படுத்த முயற்சி களை மேற்கொள்வோம், என்றார்.