சேலம், ஜன.3- சேலம் சென்ட்ரல் சட்டக் கல்லூரி யின் 24வது பட்டமளிப்பு விழாவில் தமி ழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு மாணவ, மாணவிக ளுக்கு பட்டங்களை வழங்கினார். சேலம் ஏற்காடு பிரதான சாலை யில் இயங்கி வரும் சென்ட்ரல் சட்டக் கல்லூரியின் 24-வது பட்டமளிப்பு விழாவில், தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பங்கேற்று சட்டக் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பட் டங்களை வழங்கி கௌரவித்தார். அதனை தொடர்ந்து பேசிய அவர், பொது மக்களுக்கான சட்ட அறிவிப்பு களை கொண்டு சேர்க்கும் பாலமாக மாணவர்கள் இருக்க வேண்டும். சட் டக்கல்லூரி மாணவர்களின் கல்வியை கருத்தில் கொண்டு தான் தமிழக முதல மைச்சர் மாவட்டத்திற்கு ஒரு சட்ட கல் லூரி என்ற அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். மேலும், மேல்நிலை கல்வி யிலேயே சட்ட வடிவங்களை பாடப்புத் தகங்களில் வைக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. இந்த கோரிக்கை தமிழக முதல்வரின் கவனத்திற்கும், பள்ளிக்கல்வித்துறையின் கவனத்திற் கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வரும் என தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் சேலம் நாடாளு மன்ற உறுப்பினர் பார்த்திபன், வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் மற்றும் சட்டக் கல்லூரியின் சேர்மேன் ரகுநாதன், முதல்வர், ஆசிரியர்கள், நிர்வாக இயக்குனர்கள், மாணவர் கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.