districts

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கு நிதியுதவி

நாமக்கல், மே 17- ஆத்ம நிர்பார் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் ஒரு  பகுதியாக அமைப்பு சாரா உணவு பதப்படுத்தும் சிறு நிறுவ னங்களை வலுப்படுத்தும் விதமாக பிரதமர், உணவு பதப் படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான திட்டம் அறிவிக்கப்பட் டுள்ளது. இத்திட்டம் ஒன்றிய அரசின் 60 சதவீதம் மற்றும்  மாநில அரசின் 40 சதவீதம் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப் பட்டு வருகிறது. இத்திட்டமானது, மத்திய அமைச்சக உண வுப்பதப்படுத்தும் தொழில்துறை வழியாக தமிழ்நாட்டில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு மாவட்ட அளவில் மாவட்ட ஆட் சியர் அவர்களின் தலைமையின் கீழ் இத்திட்டம் செயல்படுத் தப்பட்டு வருகிறது. ஒரு மாவட்டத்திற்கு ஒரு விளைபொருள் என்ற அடிப்ப டையில் நாமக்கல் மாவட்டத்திற்கு கோழித்தீவனம் மற்றும்  முட்டை சார்ந்த பொருட்கள்  பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள மற்றும் ஈடுபட உள்ள சிறு உணவு பதப்படுத் தும் நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு உள் ளது. இத்திட்டத்தின் மூலம் ஒரு சிறு உணவு பதப்படுத்தும்  நிறுவனம், தகுதியான திட்ட மதிப்பீட்டில் 35 சதவீதம் அல்லது  அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை நிதி உதவி பெற்று பயன் பெற வாய்ப்புள்ளது. வர்த்தக முத்திரை மற்றும் சந்தைப் பத்துதலுக்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விருப்பம் உள்ளவர் கள் வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) அலுவலகத்திற்கு விண்ணப்பம் அளிக்கலாம். மேலும் இத் திட்டம் தொடர்பான ஆலோசனைக்கு வள நபராக உள்ள  மு.வித்யபாரதி (8870757380) என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் விளையாட்டு போட்டிகள் மாவட்ட ஆட்சியர் தகவல்

ஈரோடு, மே 17- தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் விளையாட்டு போட்டிகள் நடைபெறவுள்ள தாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் நாட் டிற்காகப் பாடுபட்ட தலைவர்களின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மாண வர்களுக்கு ஆண்டு தோறும் பேச்சுப் போட்டிகள்  நடத்திப் பரிசுகள் வழங்கப்பட் டுள்ளது. இந்நிலையில், 2022-23 ஆம் நிதியாண்டில் முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாளையொட்டி, ஜீன் 3 ஆம் தேதி யன்று பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட வுள்ளன. ஈரோடு மாவட்ட ஆட்சியரக 2  ஆம் தளக் கூட்ட அரங்கில் முற்பகல் 10 மணி முதல்  போட்டி நடைபெறும். இப்போட்டிக ளுக்கான விண்ணப்பப் படிவங்களை அவர்கள் பயிலும் கல்லூரி முதல்வரிட மிருந்து பெற்றுக் கொள்ளலாம். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களைக் கல்லூரி முதல்வரிடம் ஒப்பம் பெற்று போட்டி நாளன்று தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநரிடம் நேரில் அளிக்க வேண்டும்.   ஒரு கல்லூரியிலிருந்து போட்டிக்கு இரண்டு மாணவர்கள் வீதம் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். போட்டிக்கான தலைப்புகள், மாணவர்க ளுக்கு முன்னதாகத் தெரிவிக்கப்பட மாட் டாது. சென்னை, தமிழ் வளர்ச்சி இயக்க கத்திலிருந்து முத்திரையிடப்பட்ட உறைக ளில் அனுப்பப்படும். தலைப்புகள் போட்டி யின் போது நடுவர்கள் மற்றும் மாணவர் கள் முன்னிலையில் பிரிக்கப்பட்டு அறி விக்கப்படும். போட்டி முடிவுகள் அன்றே அறிவிக்கப்படும். முதல் பரிசாக ரூ.5 ஆயிர மும், இரண்டாம் பரிசாக ரூ.3ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.2 ஆயிரம் என்ற வகை யில் வழங்கப்படும் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தெரி வித்துள்ளார்.

கூட்டுறவு சொத்தில் பட்டா வழங்கிய வருவாய் துறை தவறை மறைக்க மக்களை மோத விடுவதாக குற்றச்சாட்டு

திருப்பூர், மே 17- கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான சொத்தில் தவறாக பட்டா வழங்கிவிட்டு, இப்போது கூட்டுறவு சங்கத்தினரையும், பட்டா பெற்ற பொது மக்களையும் மோத விடும் போக்கை வருவாய்த் துறை மேற் கொண்டிருப்பதாக ஊழல் ஒழிப்பு மற்றும் சட்டப் பாதுகாப்புக்குழு கூறியுள்ளது. இது பற்றிய விபரம் வருமாறு: பெருமா நல்லூர் கூட்டுறவு சங்கத்திற்கு சார்ந்த சொத்தை அவிநாசி வட்டார வருவாய் துறை யினரும், நில அளவைத் துறையினரும் சேர்ந்து நில உடைமை மேம்பாட்டுத் திட் டத்தில் தவறு செய்து பொது மக்களுக்கு பட்டா வழங்கி உள்ளனர். மேலும் கூட்டு றவு சங்க நிலத்தை பாதையாக மாற்றி விட்டுப் பிரச்சனை ஏற்படுத்தி வருவதாக வும் குற்றஞ்சாட்டி உள்ளனர். இதுதொடர்பாக ஊழல் ஒழிப்பு மற் றும் சட்டப் பாதுகாப்புக் குழு சார்பில் சமூக ஆர்வலர் சதீஷ்குமார் கூறுகையில், பொது மக்கள் சொத்தாகிய கூட்டுறவு சங்கத் திற்கே இந்த நிலைமை என்றால் சாதாரண தனி நபர்களின் சொத்தை என்ன செய்யவும் தயங்க மாட்டார்கள் என்பது தெளிவா கிறது. தற்பொழுது பட்டா பெற்ற மக்களை கூட்டுறவு சங்கத்திற்கு எதிராக திருப்பி விட்டும், கூட்டுறவு சங்கத்தை பட்டா பெற்ற மக்களுக்கு எதிராக திருப்பி விட்டும் குளிர் காயும் வருவாய்த் துறையினரின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.  இதற்கொரு தீர்வு கொடுக்காமல் இரு தரப்பினரை மோதவிடும் செயல் எந்த விதத் திலும் ஏற்புடையது அல்ல. பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் மற்றும் நகை பொருட்கள் நிறைந்த கூட்டு றவு சங்கத்திற்குள் எது நடந்தாலும் வரு வாய் துறை அலுவலர்கள் தான் அனை வருக்கும் பதில் சொல்ல வேண்டும் என்றும் ஊழல் ஒழிப்பு மற்றும் சட்டப் பாதுகாப்புக் குழு கூறியுள்ளது.

தமுஎகச புதிய கிளை அமைப்பு

ஈரோடு, மே 17- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் பெருந்துறை கிளை அமைப்பு மாநாடு பெருந்துறையில் நடை பெற்றது. கல்வியாளரும், சமூக சேவகருமான பல்லவி பரம சிவன் மாநாட்டுக்குத் தலைமை தாங்கினார்.  பின் னர் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. அதில் தலை வராக  மா.கோபாலகிருஷ் ணன், துணைத்தலைவராக தி.நா.சுந்தர், செயலாளராக  ராஜேஷ் முருகானந்தம், துணைச்செயலாளராக பிர காஷ்ராஜ், பொருளாளராக கண்மணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் செயற்குழு உறுப்பினர்க ளாக தங்கவேல்,  சனா வுல்லா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

உதகை அரசு கலைக் கல்லூரியில் புதிய நுழைவு வாயில் திறப்பு

உதகை, மே 17- உதகை அரசு கலைக் கல்லூரி புதிய நுழைவு வாயிலை ஆ.ராசா எம்.பி.,திறந்து வைத்தார்.  நீலகிரி மாவட்டத்தில் ஆங்கிலேயர் காலத்தில் முதல்முறையாக கட்டப்பட்ட கல்  கட்டிடமான உதகை அரசு கலைக் கல்லூ ரிக்கு ரூ.8.50 லட்சத்தில் புதிதாக நுழைவு வாயில் கட்ட முடிவு செய்யப்பட்டது. கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட பணிகள் விறு விறுப்பாக நடைபெற்றது. இந்நிலையில் இந்த நுழைவாயில் கட்டிட பணிகள் முடிந்து திறப்பு விழா செவ்வாயன்று நடை பெற்றது. இதில் நீலகிரி தொகுதி எம்.பி., ஆ.ராசா கலந்து கொண்டு நுழைவு வாயிலை திறந்து வைத்தார்.  இதில் கல்லூரி முதல்வர் ஈஸ்வர மூர்த்தி, பேராசிரியர்கள் ஷோபனா, எபி னேசர் மற்றும் மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக விழா வில் தனியார் நிறுவனம் சார்பில் கணினி அறிவியல் துறைக்கு டிஜிட்டல் கரும் பலகை உள்ளிட்ட உபகரணங்கள் வழங் கப்பட்டது.

;