திருப்பூர், டிச.19- காங்கயம் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில், இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. காங்கயம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வெள் ளியன்று கங்கயம் வட்ட சட்டப்பணிகள் குழு மற்றும் காங் கயம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் இலவச மருத்துவ பரி சோதனை முகாம் நடைபெற்றது. இதனை காங்கயம் வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவா் மற்றும் சார்பு நீதிபதி வி. பிரஸ்னவ், குற்றவியல் நீதித்துறை நடுவர் டி.பிரவீன் குமார், மாவட்ட உரிமையியல் நீதிபதி எம்.அப்சல் பாத்திமா ஆகி யோர் தலைமை தாங்கி துவக்கி வைத்தனர். இந்த முகாமில் காங்கயம் வழக்கறிஞர்கள் சங்க தலை வா் என்.கார்த்திகேயன், அரசு வழக்கறிஞர் எஸ்.செல்வகு மார், வழக்கறிஞர் சி.எம்.அருணாச்சலம் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் கண் பார்வை குறைபாடு, ரத்த அழுத் தம், சர்க்கரை அளவு கண்டறிதல் உள்ளிட்ட பரிசோதனை கள் திருப்பூர் மெல்வின் ஜோன்ஸ் அரிமா சங்கம், லோட்டஸ் கண் மருத்துவமனை மற்றும் திருப்பூர் டாக்டர் மோகன்ஸ் லேப் ஆகியோர்கள் இணைந்து நடத்தினர். இதில் பங்கு பெற்ற மருத்துவர்கள் கண் பார்வை குறைபாடு, இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு ஆகியவற்றை சரி செய்து கொள்ளவும் தற்காத்து கொள்ளவும் ஆலோசனைகளை வழங்கினர். முகாமில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதி மன்ற ஊழியர்கள், பொதுமக்கள் என மொத்தம் 106 பேர் பரிசோதனை செய்து கொண்டு பயன் பெற்றனர்.