உடுமலை, ஏப்.4- உடுமலையில் நீட்தேர்வு மற்றும் ராணுவ அதிகாரிகளுக் கான நுழைவுத் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் சுபாஷ் ரேணுகாதேவி நினைவு அறக்கட்டளை சார்பில் செவ்வாயன்று துவங்கப்பட்டுள்ளது. உடுமலை - பொள்ளாச்சி சாலையில் உள்ள சுபாஷ் ரேணுகா தேவி நினைவு அறக்கட்டளை அரங்கில் நுழைவுத் தேர்வு பயிற்சி வகுப்புகள் துவக்க விழா நடைபெற்றது. இந்த பயிற்சிகள் ஏப்ரல் 4ஆம் தேதி முதல் மே 5ஆம் தேதி வரை நீட்தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. இந்நிகழ்வுக்கு, உடுமலை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் தலைமை ஏற்றார். இளமுருகு வரவேற் றார். உடுமலை ரோட்டரி சங்க தலைவர் சத்தியம் பாபு, உடுமலை கட்டுநர் வல்லுநர் சங்க தலைவர் ரவி ஆனந்த் ஆகி யோர் பயிற்சி குறித்து உரையாற்றினர். இதில், உடுமலை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன், தான் படிக்கும் காலங்களில் போட்டி தேர்வுக்கு எப்படி தயாரானேன் என்பது குறித்து விளக்கி பேசினார். நிறைவாக, லெப்டினன்ட் சுபாஷ் ரேணுகாதேவி அறக் கட்டளை நிறுவனர் செல்வராஜ் நன்றி கூறினார். ஏழை மாணவ, மாணவிகள் உதவும் வகையில், இந்த நீட் பயிற்சி மையம் துவக்கப்பட்டுள்ளது. மேலும், நூலகம் மற்றும் அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டும் பயிற்சி அளிக்கப்படுகிறது இது தவிர பள்ளி மாணவர்களின் ஆளுமை திறனை வளர்க்கும் வகையில், ஞாயிறுதோறும் இலவச ஓவியம், சிலம்பம், பேச்சுப்போட்டி, யோகா பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.