districts

img

சூறாவளி காற்றால் பயிர்கள் சேதம்: இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

திருப்பூர், மே 31- அண்மையில் பெய்த மழையால் திருப்பூர் மாவட்டத்தில் சேதமடைந்த வாழை, தென்னை பயிர்களுக்கு உரிய  இழப்பீட்டை வழங்க  வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தினர் மாவட்ட ஆட்சியரிடம் வலியு றுத்தினர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் செவ்வாயன்று விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.  ஆட்சியர் கிறிஸ்துராஜ் தலைமை ஏற் றார். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங் கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.ஆர்.மதுசூதனன், மாவட்ட செயலாளர் ஆர்.குமார் மற்றும் நிர்வாகிகள் பங் கேற்று விவசாயிகள் கோரிக்கை குறித்து பேசினர். அவர்கள் பேசுகையில், அவிநாசி வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வாழை, மஞ்சள், சோளம், குச்சிக் கிழங்கு சாகுபடி அதிகளவு நடைபெறுகி றது. இவர்களின் விவசாய பம்ப் செட்டு களுக்கு தினமும் இரு தவணைகளில் 14  மணி நேரம் மின்சாரம் வழங்கப்பட்டது.  இப்போது 9 முதல் 10 மணி நேரம் மட் டுமே மின்சாரம் வழங்கப்படுகிறது. இத னால் விவசாயிகள் சிரமப்படுகின்றனர். முன்போல் 14 மணி நேரம் குறிப்பிட்ட நேரத்தில் மின்சாரம் வழங்க வேண் டும். அதேபோல் சேவூர், பாப்பன்குளம், காசிலிங்கம்பாளையம், பல்லடம் வட் டம் தெற்கு அவிநாசிபாளையம், அலகு மலை, பொங்கலூர் உள்ளிட்ட பல பகுதி களில் சமீபத்தில் பெய்த மழை காரண மாக வாழை மற்றும் தென்னை மரங்கள்  அடியோடு சாய்ந்துவிட்டன.

இதனால்  மகசூல் பாதிக்கப்பட்டு விவசாயிக ளுக்கு லட்சக்கணக்கான ரூபாய் இழப்பு  ஏற்பட்டுள்ளது. ஆகவே முறையான கணக்கெடுப்பு நடத்தி உரிய இழப் பீடு, காப்பீட்டுத் தொகை வழங்க வேண் டும். தனியார் நிறுவனங்கள் கொள் முதல் செய்யும் பாலுக்கு ஆவின் நிறுவ னத்தை விட கூடுதல் விலை கொடுக்கப் படுகிறது. எனவே ஆவின் பால் கொள் முதலுக்கு விவசாயிகளுக்கு கூடுதல் விலை கொடுக்க வேண்டும். ஜம்புக்கல்  மலை பகுதியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து ஆக்கிரமிப்பை மீட்க நட வடிக்கை எடுக்க வேண்டும். நாய்கள் கடித்து ஆடு, கன்று உள்ளிட்ட கால் நடைகள் உயிரிழப்பு ஏற்பட்டு விவசா யிகள் பெரும் இழப்பை சந்திக்கின் றனர். எனவே இழப்பீடு வழங்கவும், கால்நடைகளைப் பாதுகாக்கவும் உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.  இதன்பின் காலம்பாளையத்தில் பழுதடைந்து கீழே விழும் நிலையில் உள்ள நியாய விலை கடைக்கு பதிலாக புதிய கட்டிடம்  கட்டித் தர வேண்டும் என தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் வடக்கு ஒன்றிய செய லாளர் எஸ்.அப்புசாமி மனு அளித் தார். விவசாயிகள் முன்வைத்த கோரிக் கைகள் குறித்து உரிய நடவடிக்கை  எடுப்பதாகவும், புகார் தொடர்பான மேற் கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளிடம் ஆட்சியர் கிறிஸ்துராஜ் கேட்டறிந்தார்.

;