நாமக்கல், ஜன.10- மோகனூர், வளையபட்டி பகுதியில் சிப் காட் தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தை கைவிடக்கோரி, விவசாயிகள் தமிழக அரசின் பொங்கல் பரிசை புறக்கணித்து, தங்கள் வீடு களுக்கு முன்பு நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். நாமக்கல் மாவட்டம், மோகனூர், வளை யபட்டி பகுதியில் உள்ள விவசாயிகள் தமிழக அரசின் சார்பில், சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதை அரசு கைவிட வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற னர். மேலும், அப்பகுதியில் விவசாயிகள் தங் கள் வீடுகளுக்கு முன்பு, பொங்கல் பரிசை புறக்கணிக்கிறோம் என்ற நோட்டீசையும் ஒட்டி தங்களின் எதிர்ப்பை தெரிவித்துள்ள னர். இதையடுத்து விவசாய முன்னேற்ற கழக பொதுச்செயலாளா் கே.பாலசுப்பிர மணியன் தலைமையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் உதவி கோட்டாட்சி யரிடம், விவசாயிகள் எங்களது பகுதிக்கு சிப்காட் வேண்டாம் என்றும், மேலும் வருகிற பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு வழங் கும் பொங்கல் தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாய் பணமும் எங்களுக்கு வேண்டாம் என்று அந்த மனுவில் எழுதி அளித்தனர். இதில் கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி யின் ஒருங்கிணைந்த நாமக்கல் மாவட்ட விவ சாய அணிச் செயலாளா் கே.ரவிச்சந்திரன், சிப்காட் எதிா்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ராம்குமார் மற்றும் பழனிவேல், சரவணன் தண்டபாணி உள்ளிபட்ட பலா் கலந்து கொண் டனர்.