districts

img

முலனுரில் முருங்கை பவுடர் தொழிற்சாலை தமிழக அரசிற்கு விவசாயிகள் கோரிக்கை

தாராபுரம் மற்றும் முலனுர் பகுதியில் சுமார் 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் முருங்கை காய் சாகுபடி செய்யப் படுகிறது. முருங்கை யில் செடி முருங்கை கொடி முருங்கை. மர  முருங்கை, செம் முருங்கை என பல  ரகங்கள் இருந்தா லும் தாராபுரம் மற்றும் முலனுர் பகுதியில் செடி முருங்கை மற்றும் மர முருங்கை அதிக அள வில் பயிரிடப்படுகிறது. செடிமுருங்கை நீளமாகவும், சன்னமாகவும் இருக்கும் மரமுருங்கை குட்டையாகவும் கனமாகவும் இருக்கும்.  சராசரியாக ஒரு ஏக்கருக்கு வருடத்தில்  செடிமுருங்கை 40டன்னும், மரமுருங்கை 30 டன்  விளைச்சலும் கொடுக்கும்.  பிப்ரவரி மாதம் தொடங்கி  மே வரை உள்ள கோடை கால பருவத்தில் முருங்கை விளைச்சல் வழக்கத்தை விட கூடுதலாக இருக்கும்.  இச்சமயத்தில் நாள்தோறும் முருங்கைகாய்களை அறுவடை செய்யும் சிறு மற்றும் குறு விவசாயிகள் மூட்டைகளாக அடுக்கி தாராபுரம் மற்றும் முலனுர், ஒட்டன்சத்திரத்திம் சந் தைக்கு கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர். இவ்வாறு கொண்டுவரப்படும் முருங்கைகாய்களை கொள்முதல் செய்வதற்காக உள்ளுர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் மண்டிகள் வைத்துள்ளனர். இதன் மூலம் மொத்தமாக டன் கணக்கில் கொள்முதல் செய்து லாரிகள் மூலம் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்கின்றனர். இவ்வாறு வருடத்திற்கு 20 ஆயிரம் டன் வரை முருங்கைகாய் இப்பகுதிகளில் கொள்முதல் செய்யப்படுகிறது. இவ்வாறு கொள்முதல் செய்யும்போது விவசாயிகளுக்கு கிலோவுக்கு ரு,10 முதல் 15 வரை விலை நிர்ணயம் செய்யப்படும். இந்த விலை போதுமான அளவு இல்லை என்றாலும் ஓரளவு லாபம் கிடைக்கும். ஆனால் சில நேரங்களில் முருங்கை வரத்து அதிகமாக இருக்கும்போது விலை கடுமையாக வீழ்ச்சியடைந்து கிலோவுக்கு ரு.5 மட்டுமே கிடைக்கும். இதனால் விவசாயிகள் கடுமையான நஷ்டமடைவது சமீப காலமாக வாடிக்கையாக உள்ளது. எனவே முலனுரில் முருங்கை பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலையை அரசு தொடங்கி முருங்கை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாது காக்க வேண்டும் என்பதே  விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையாகும். இதனை தமிழக அரசு நிறைவேற்றிட முன்வர வேண்டும்.