உடுமலை, மார்ச் 11- உடுமலையில் காலாவதியான மருந்து பொருட்களை தண்ணீர் குட்டையில் கொட் டிய நபர்களை பொது மக்கள் பிடித்து வரு வாய்த்துறையினரிடம் ஒப்படைத்தனர். உடுமலை தாலுக்கா சின்னவீரம்பட்டி ஊராட்சி இந்திராநகர் பகுதியில் பொது மக் கள் பயன்படுத்தும் தண்ணீர் குட்டை உள் ளது. இப்பகுதி மக்கள் கால்நடைகளின் மேய்ச்சலுக்கும் மீன் வளர்ப்புக்கும் இந்த குட்டையை பயன்படுத்துகிறார்கள். இதில் இரவு நேரங்களில் மருத்துவ கழிவுகள் மற் றும் இறைச்சி கழிவுகளை மர்ம நபர்கள் கொட்டிவிட்டு செல்கின்றனர். இதனால் தண் ணீர் மற்றும் நிலங்கள் கடுமையாக பாதிக்கப் படுகிறது. இதுகுறித்து, பல முறை அரசு அதி காரிகளுக்கு தெரிவித்தும் நடவடிக்கை எடுக் கப்படாமல் இருந்தது. இந்நிலையில் 11 ஆம் தேதி சில நபர்கள் குட்டையில் தீ வைப்பதாக பொது மக்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. அங்கு சென்று பார்த்தபோது காலாவதியான மருந்துகளை சில நபர்கள் தீ வைத்து கொண் டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ள னர். உடனடியாக ஊராட்சி மற்றும் வருவாய்த் துறைக்கு தகவல் தரப்பட்டு அவர்களிடம் தீ வைத்து கொண்டிருந்த நபர்களையும் மற்றும் காலாவதியான மருத்து பொருள்களையும், பொது மக்கள் ஒப்படைத்தனர்.