districts

img

ஈரோடு: மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்

ஈரோடு, பிப்.4- ஈரோடு மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை  தாக்கல் செய்தனர். ஈரோடு மாநகராட்சி தேர்தலில் மூலப்பாளை யம் 57 ஆவது வார்டில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போது கூட்டணியின் வேட்பா ளராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில்  போட்டியிடும் சி.முருகேசன்  வெள்ளியன்று வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிகழ்வின் போது மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர்கள் ப.லலிதா, பி.ராஜா, ஈரோடு தாலுகா செயலாளர் பாலசுப்பிரமணியன், சதீஷ்  மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். ஈரோடு மாநகராட்சி சூரம்பட்டி வலசு 48 ஆவது வார்டில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சி யின் வேட்பாளர் எஸ்.சிவஞானம் வியாழனன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். ஈரோடு மாவட்டம் கோபி நகராட்சி 27 ஆவது வார்டில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பா ளர் ஜி.ஏ.துரைசாமி வேட்புமனு தாக்கல் செய் தார். உடன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஏ.எம்.முனுசாமி, தாலுகா செயலாளர் யுவ ராஜ், வி.சி.நந்தகுமார் உள்ளிட்ட பலர் உடனி ருந்தனர். அந்தியூர் பேரூராட்சி 3 ஆவது வார்டில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் கீதா சேகர்  வெள்ளியன்று வேட்பு மனு தாக்கல் செய் தார். இந்நிகழ்வின்போது திமுக சார்பில் அந்தி யூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி..வெங்கடாசலம், நகர பொறுப்பாளர் எஸ்.கே.காளிதாஸ், எஸ். பழனியம்மாள், காங்கிரஸ் நிர்வாகி சந்திரன், சிபிஐ ஏ.ஜி.நடராஜ், சிபிஎம் மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் ஆர்.கோமதி, ஆர்.விஜயராகவன், எஸ். சுப்ரமணியன், தாலுகா செயலாளர் ஆர்.முருகே சன், எஸ்.வி.மாரிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஈரோடு வட்டம், நசியனூர் பேரூராட்சி 14  ஆவது வார்டு மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சி.பி.தங்கவேல் தனது வேட்புமனுவினை தாக் கல் செய்தார். உடன், சிபிஎம் தாலுகா செயலா ளர் என்.பாலசுப்ரமணி, விவசாய தொழிலாளர் சங்க தலைவர் எம்.நாச்சிமுத்து உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.