districts

img

சொத்துவரியைக் குறைக்க வேண்டும்

ஈரோடு, நவ. 25- சொத்துவரியைக் குறைக்க ஈரோடு மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங் களின் கூட்டமைப்பின் செயற்குழு கூட்டம் கூட்டமைப்பின் தலைவர் வி.கே.ராஜமாணிக்கம் தலைமையில் நடை பெற்றது. பைனான்ஸ் அசோசியேன் தலைவர் சி.முத்துசாமி  வரவேற்றார். கூட்டத்தில், பீக் அவர்சில் மின் கட்டணத்தை 15  விழுக்காடு மட்டும் குறைக்கப்பட்டுள்ளது. முழுமையாகக் குறைக்க வேண்டும். ஈரோடு மாநகராட்சி மாமன்றத்தில் 25  விழுக்காடுக்கு மிகாமல் சொத்து வரி விதிக்க தீர்மானம் நிறை வேற்ற வேண்டும். சுமைதூக்கும் மாட்டுவண்டிகளை மாற்றி  மினிடோர் அல்லது வேன்கள் மூலம் சரக்கு எடுக்கவும், அதற்கு சுமைதூக்குவோர் மற்றும் லாரி நிறுவன ஊழியர்கள்  பழைய நடைமுறையில் தொழிலாளர்கள் பணிபுரிய ஒத்து ழைப்பு வழங்க வேண்டும். காளை மாடு சிலையிலிருந்து மூலப்பாளையம் வரை மேம்பாலம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈ.வே.ரா கலந்து கொண்டு உரையாற்றினார். பொதுச்செயலாளர் பி.ரவிச்சந்திரன், பொருளாளர் ஆர். முருகானந்தம் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண் டனர். இறுதியாக இயக்குநர் கே.சிவக்குமார் நன்றி கூறி னார்.

;