districts

img

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட யானை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

கோவை, மார்ச் 24- போளுவாம்பட்டி வனப்பகுதியில் உடல் நலக்குறை வால் பாதிக்கப்பட்ட 8 வயது பெண் யானை சிகிச்சை பல னின்றி உயிரிழந்தது. கோவை போளுவாம்பட்டி வனச்சரகம், முள்ளாங்காடு தாணிக்கண்டி வனப்பகுதியில் உடல் நலக்குறைவால் பெண் குட்டி யானை அவதிப்பட்டு வருவதை, ரோந்து சென்ற வனத்துறை ஊழியர்கள் செவ்வாயன்று கண்டறிந்தனர். இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் மற்றும் கால்நடை மருத்துவ அலுவலருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இந் நிலையில், கால்நடை மருத்துவர்கள் குழு மற்றும் வனத் துறை அதிகாரிகள் புதனன்று முதல் யானை நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். இதையடுத்து உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்ட யானைக்கு தாணிக்கண்டி அருகே மயக்க ஊசி செலுத்தி சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. முதல் கட்ட ஆய்வில் யானையின் வாய் பகுதி  கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தது, கண்டறியப்பட் டது. 90 சதவிகிதம் நாக்கு அறுபட்டிருந்ததன் காரணமாக,  இரண்டாவது நாளாக மயக்க நிலையில் உள்ள யானைக்கு  வலி நிவாரணி மற்றும் நோய் எதிர்ப்பு திறன் மருந்துகள் கொடுக்கப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கபட்டு வந்தது. மேலும், டாப்சிலிப் பகுதியிலிருந்தும் யானை கண்கா ணிப்பு குழுவினர் வரவழைத்து சிகிச்சை அளித்து வந்த னர். ஆனால், வியாழனன்று மாலை சிகிச்சை பலனின்றி பெண் யானை குட்டி உயிரிழந்தது.