districts

img

கோயமுத்தூர் குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் தேர்வு

கோவை, ஏப்.30- கோயமுத்தூர் குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் தேர்தல் திங்களன்று நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, தேர்தல் முடிவுகள் செவ்வாயன்று வெளியி டப்பட்டது. அதன்படி, தலைவராக டி.அய்யப்பன், துணைத் தலைவராக ஆர்.ரமேஷ், செயலாளராக எஸ்.ஷீலாராஜ்,  இணைச்செயலாளராக சி.எம்.கலைவாணி, பொருளாள ராக எம்.கார்த்திக் ராஜா மற்றும் செயற்குழு உறுப்பினர்க ளாக ஏ.அப்துல் லத்தீப், எம்.கீதா, எஸ்.ஜெய் சூர்யா, சாந்தி  நாராயணன், என்.சித்தார்த் ஆகியோர் தேர்வு செய்யப்பட் டனர்.