districts

img

பெட்ரோல், டீசல் விலை உயர்வு எதிரொலி: ஒன்றிய அரசை கண்டித்து சிபிஎம் ஆவேசம்

கோவை,ஏப்.5–  ஒன்றிய மோடி அரசின் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் சுங்கச் சாவடி கட்டணம் அதிகரிப்பு உள்ளிட்ட விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட்  கட்சியினர் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். கோவை பெரியநாயக்கன் பாளையத் தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி கண்டன உரையாற்றினார். இதில்,  நா.பாலமூர்த்தி,  நவ.சிவராஜன்  உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். முன்னதாக, எரிபொருட்களின் விலை உயர்வை கண் டித்து ஆட்டோவில் கயிறு கட்டி இழுத்து வந்து, நூதன போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதேபோன்று தடாகம் பகுதியில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கேசவமணி, பழனி சாமி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற் றனர். கோவை எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்திற் குட்பட்ட காளப்பட்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஒன்றியக்குழு செயலா ளர் ஆர்.கோபால், வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் கே.எஸ்.கனகராஜ் மற்றும் ஈஸ்வரன், வெள்ளிங்கிரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொண்டாமுத்தூரில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலா ளர் வடவள்ளி மணி தலைமை தாங்கி னார். இதில்  ஆறுச்சாமி, ஜெகநாதன் உள் ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.மேட்டுப்பாளையம் தாலுகாவிற்குட்பட்ட காரமடையில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு தாலுகா செயலாளர் ஏ.எல்.சிராஜு தீன் தலைமை தாங்கினார். இதில் பெரு மாள்,  ராஜலட்சுமி, வீரபத்ரசாமி, சந்திர சேகரன், பிரதீப் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

ஈரோடு
ஈரோடு மாவட்டம், ஆப்பக்கூடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு  எம்.காளீஸ் வரன் தலைமை வகித்தார். ஏஜி.குழந்தை சாமி, எம்.பெத்தான்,  என்.சின்னச்சாமி, பி.பி.பழனிசாமி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். நம்பியூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கிளை செயலாளர் கே.சி.ரங்கசாமி தலைமை வகித்தார். பெருந்துறை  வாவிக்கடையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வி.ஏ.விஸ்வநாதன் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் வி.எஸ்.மணியன், கே.குப்புசாமி,  வி.பி.அருணாச்சலம் ஆகியோர் கலந்து கொண்ட னர்.

நாமக்கல்
ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் அருகே வயிற்றில் ஈரத்துணி கட்டி  மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத் திற்கு நகரக் கிளை செயலாளர் சி. சண்முகம் தலைமை வகித்தார். மாவட்ட செயலா ளர் எஸ்.கந்தசாமி, ஒன்றிய செயலாளர் கோ.செல்வராசு, மாவட்டக் குழு உறுப்பி னர் பி.ராணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சேலம்
மேட்டூரில், சிஐடியு சார்பில் நடை பெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மேட்டூர் அனல் மில் கிளை தலைவர் எஸ்.செல்வ கணபதி தலைமை வகித்தார். கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் செ.கருப்பண் ணன் துவக்கி வைத்தார். அரசு போக்கு வரத்து ஓய்வு பெற்றோர் அமைப்பின் மூத்த உறுப்பினர் சூசைபிரகாசம், நீர்மின் உற்பத்தி வட்ட செயலர் பி.கே.சிவக்குமார் சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர்  வீ.இளங்கோ ஆகியோர் கண்டன உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திர ளானோர் பங்கேற்றனர்.

;