districts

img

ஓட்டுநர் தினம்: இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

சேலம், ஜூன் 1- ஓட்டுநர் தினத்தை முன்னிட்டு, சேலத்தில் ஆட்டோ தொழிலாளர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். நாடு முழுவதும் ஜூன் 1 ஆம் தேதியன்று ஓட்டுநர் தினம்  கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்ஒருபகுதியாக சேலம்  மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் மாவட் டத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு இனிப்பு கள் வழங்கி ஓட்டுநர் தினத்தை கொண்டாடினர். மக்களின்  வளர்ச்சிக்கு பெரும் உதவியாக பணியாற்றி வரும் ஓட்டுநர் களுக்கு அரசு அனைத்து விதமான சலுகைகளும் வழங்க வேண்டும். ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பயன்படுத்தும் ஆட்டோக்கள், மக்களின் அன்றாட தேவைகளில் ஒன்றாக  பயன்படுகிறது. ஆட்டோவை ஓட்டும் தொழிலாளர்கள்  காவல் துறை, போக்குவரத்து துறை அதிகாரிகளால் பெரிய  அளவில் பாதிக்கப்படுகின்றனர். அரசின் சார்பில் அதிக அபராதங்கள் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஒன்றிய, மாநில  அரசுகள் இன்சூரன்ஸ் மற்றும் எப்சி கட்டணங்கள் சாலை  வரிகளை குறைக்க வேண்டும் என ஆட்டோ ஓட்டுநர்கள்  கோரிக்கை விடுத்தனர். சேலம் ஜங்ஷன் பகுதியில் ஆட்டோ தொழிலாளர் சங்க செயலாளர் உதயகுமார் தலைமையில், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இதில் எண்ணற்ற  ஆட்டோ தொழிலாளர்கள் பங்கேற்றனர். இதேபோல் தமிழ் நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கம் சார்பில் ஓட்டுநர் தினம் கொண்டாடப்பட்டது.

;