மேட்டுப்பாளையம், ஜூலை 5- நெடுஞ்சாலையோரம் குப்பை களை கொட்டி தீ வைக்கும் ஊராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கை வாகன ஓட்டிகளை புகை மூட்டத்தில் திணற டித்து வருகிறது. கோவை மாவட்டம், மேட்டுப்பா ளையம் நகரை ஒட்டியுள்ளது சிக்க தாசம்பாளையம் ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் முறையாக அப்புறப்படுத்தபடுவதில்லை. பொது மக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் ஆங்காங்கே கொட்டப்படுவதாக புகார் எழுந்துள்ளது. குப்பைகளின் பெரும் பகுதி ஊராட்சி அலுவலகத்தின் அருகே மேட்டுப்பாளையத்தில் இருந்து சிறு முகை வழியே சத்தியமங்களம் செல் லும் சாலையோரம் கொட்டப்பட்டு வரு வதோடு, அதில் நெருப்பும் பற்ற வைக் கப்பட்டு வருகிறது. பிளாஸ்டிக் கழிவு கள் உணவு கழிவுகள் உள்ளிட்ட குப்பை களில் தீ பற்றி எரிவதால் கடும் துர் நாற்றத்துடன் புகை கிளம்பி வருகிறது. நெடுஞ்சாலையோரம் கொட்டப்பட்ட குப்பையில் இருந்து புகை கிளம்புவ தால் அவ்வழியே பயணிக்கும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வரு கின்றனர். மேலும், குப்பை எரிக்கப்படும் இடத் தின் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளி யில் பயிலும் மாணவ மாணவியர் மற் றும் குடியிருப்பு வாசிகள் கண் எரிச் சல், குமட்டல் போன்ற உடல் உபாதை களுக்கு ஆளாகி வருகின்றனர். இது குறித்து சிக்கதாசம்பாளையம் ஊராட்சி அலுவலகத்தில் விசாரித்த போது, “ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பை களை கொட்ட இடமில்லாத காரணத் தால் வேறு வழியின்றி சாலையோரம் கொட்டி வருவதாகவும் இதற்கு மாற்று ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப் பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.