districts

கண்ணாடி இழைகள் கொண்டு செல்வதால் பயிர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை: மாவட்ட ஆட்சியர் தகவல்

திருப்பூர், செப்.16- இணையதள வசதி வழங்கும் பாரத்  நெட் திட்டத்தில் நிலங்களில் உள்ள மின் கம்பங்களில் கண்ணாடி இழைகள் கொண்டு செல்வதால், பயிர்களுக்கு எந்த பாதிப்பும் வராது. எனவே கண் ணாடி இழைகள் கொண்டு செல்ல கூடாது என தடுக்கும் நபர்கள் மீது  குற்றவியல் நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர்  தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தா. கிறிஸ்துராஜ் திங்களன்று வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதா வது, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள  265 கிராம ஊராட்சிகளிலும் இணைய தள வசதி வழங்கும் பாரத் நெட் திட்டமா னது தமிழ்நாடு கண்ணாடி இழை வலை யமைப்பு நிறுவனம் மூலம் தற்போது  செயல்படுத்தப்பட்டு வருகிறது. கண் ணாடி இழை 85 சதவீதம் மின்கம்பங்கள் மூலமாகவும், 15 சதவீதம் தரை வழி யாகவும் இணைக்கப்படுகிறது. இது வரை நமது மாவட்டத்தில் உள்ள  265 ஊராட்சிகளில் 159 ஊராட்சிக ளில் இணைய வசதி வழங்க தயார் நிலை யில் உள்ளது. இத்திட்டத்திற்கான ஆர் ஏசிகே, யுபிஎஸ் உள்ளிட்ட உபகரணங் கள் ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் உள்ள கிராம ஊராட்சி சேவை மையம்  அல்லது அரசு கட்டிடத்தில் நிறுவப் பட்டு வருகிறது.   கண்ணாடி இழை 85% ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள மின்கம்பங்கள் வழியாக கொண்டு செல்வதற்கு அர சாணை பிறப்பித்துள்ளது. இந்நிலை யில் சிலர் தங்களுக்கு சொந்தமான நிலங்களில் கண்ணாடி இழை கொண்டு  செல்லக்கூடாது என தடை செய்கின்ற னர். இத்திட்டம் முழுமையாக அரசின்  திட்டம். கண்ணாடி இழை மின்சாரத்தை கடத்தாது. எனவே கண்ணாடி இழை  ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள மின்கம்பங் கள் வழியாக கொண்டு செல்ல பொது மக்கள் தடை செய்யக்கூடாது. மேலும்,  விளை நிலங்களில் உள்ள மின்கம்பங் களில் வழியாக கண்ணாடி இழைகள் இணைக்கப்படும் போது பயிர்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது. இத் திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் போது ஒவ்வொரு கிராம ஊராட் சிகளில் வசிக்கும் மக்கள் அனைவ ரும் இணையதள வசதிகளை பெற முடி யும். ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும்  பிஓபி மையங்களில் பொருத்தப்பட் டுள்ள மின்கலம் யுபிஎஸ், ரூட்டர், ராக்  மற்றும் கண்ணாடி இழை வலைய மைப்பு உள்ளிட்ட உபகரணங்கள் யாவும் அரசின் உடமைகள் ஆகும்.  இந்த உபகரணங்களை சேதப்படுத்து வது, திருடுவது, கண்ணாடி இழைகளை  துண்டாக்குவது மற்றும் மின்கம்பங்கள்  வழியாக கொண்டு செல்ல தடை செய் யும் நபர்கள் மீது கடுமையான குற்ற வியல் நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என கூறப்பட்டுள்ளது.