தருமபுரி, செப்.1- வெள்ள பாதிப்பு காலங்களில் பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வது குறித்து அரூர் பெரிய ஏரியில் பேரி டர் மேலாண்மை குழு சார்பில் ஒத்திகை நிகழ்வு வியாழ னன்று நடைபெற்றது. தருமபுரி மாவட்ட பேரிடர் மேலாண்மை குழு சார்பில் அரூர் பகுதியில் வெள்ள பாதிப்புகள் ஏற்படலாம் என எதிர் பார்க்கப்படக்கூடிய இடங்களில் பேரிடர் மீட்பு, வெள்ளத் தடுப்பு மற்றும் பாதுகாப்பு மாதிரி ஒத்திகை நிகழ்வு நடைபெற் றது. ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட நீர் நிலைகளில் தண்ணீரில் மாட்டிக் கொண்டு தத்தளிக்கும் நபர்களை மீட்டு அவர்க ளுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்தும் பொது மக்க ளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றன. மேலும், வெள்ள பாதிப்பு காலங்களில் பொதுமக்கள் தங்களை பாது காத்துக் கொள்வது குறித்தும் அறிவுறுத்தப்பட்டன.