districts

img

மாற்றுத்திறனாளிகள் வழக்காடு மன்றம்

  சேலம், டிச.2 - மாற்றுத்திறனாளிகளின் வாழ்வுரி மையை பறித்த ஒன்றிய பாஜக அரசு குற்ற வாளியை என தமிழ்நாடு அனைத்து வகை  மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப் போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில்  மக்கள் மன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும் வழக்காடு மன்றம் நடை பெற்றது. மாற்றுத்திறனாளிகளை வஞ்சிக்கும் ஒன்றிய அரசின் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும் போராட்டத்தில் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள்  மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான நலச் சங்கத்தினர் ஈடுபட்டனர். அரசு வேலை வாய்ப்பில் 4 சதவிகித இட ஒதுக்கீட்டின் படி,  பல  துறைகளில் காலியாக உள்ள பணியிடங் களை ஒன்றிய அரசு நிரப்ப  வேண்டும். ஒன்றிய  அரசு, மாற்றுதிறனாளிகளுக்கு அளித்த  வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.  புதிய உரிமைகள்  சட்டம் -2016 ஐ,  முழுமை யாக அமல்படுத்த மறுக்கும் ஒன்றிய அரசை  கண்டித்து மாற்றுத்திறனாளிகள் குற்றப் பத்திரிக்கை தாக்கல் போராட்டத்தில் ஈடு பட்டனர்.  சேலம் கோட்டை மைதானத்தில் மக்கள் மன்ற நடுவராக சிபிஎம் மாவட்ட செய லாளர் மேவை. சண்முகராஜா பங்கேற் றார். வழக்கு தொடுப்பவர்களாக சங்கத்தின்  மாவட்ட செயலாளர் என்.குணசேகரன் மாவட்ட பொருளாளர் எம்.கனகராஜ், மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.அமலா  ராணி ஆகியோரும், வழக்கை மறுப்பவராக மாவட்ட உதவித் தலைவர் வி.கே. வெங்க டாசலம் பங்கேற்றார். மாவட்ட தலைவர் பி. ஹரி கிருஷ்ணன் நன்றி கூறினார். இதில் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

;