districts

img

டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம்

அவிநாசி, பிப்.6 - அவிநாசி அருகே தெக்கலூரில் பல்வேறு கோரிக்கை களை முன்வைத்து விசைத்தறி உரிமையாளர்கள் கூட்ட மைப்பு சார்பில் வியாழனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விசைத்தறி உரிமையாளர்கள் கூறுகையில், மத் திய மாநில அரசு அதிகாரிகளையும், ஜவுளி துறை சார்ந்த அதி காரிகளையும் தொடர்ந்து 32 முறை சந்தித்து நியாயமான ஒப் பந்தக் கூலி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உள் ளோம். இதுவரை தீர்வு ஏற்படவில்லை. பல்வேறு நெருக்கடி களுக்கு இடையில் விசைத்தறி தொழில் செய்து வருகிறோம்.  குடும்பத்தோடு இரவு-பகலும் ஆண், பெண், மகன், மகள் அனைவரும் பாடுபட்டும், மிக வறுமைக்கோட்டிற்கும் கீழே  தள்ளப்பட்டுள்ளோம்.  2022ஆம் ஆண்டு மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் ஒப் பந்தம் செய்தபடி அமல்படுத்திய கூலியை பெற்றோம்.  சில மாதங்களிலே கொடுத்த கூலியை டெக்ஸ்டைல்ஸ் உரி மையாளர்கள் குறைத்து விட்டனர். இதில் தொழிலாளர்க ளுக்கு பகிர்ந்தளித்த கூலியை பிடித்தம் செய்ய முடியாததனா லும், மின் கட்டணம் அதிகரித்ததினாலும், தொழில் சார்ந்த பிற  துறை கூலி உயர்வாலும் விசைத்தறியாளர்களால் இழப்பை  சரி செய்ய முடியவில்லை. இந்த குறைந்தபட்ச கோரிக் கையை அரசிடம் வாதாடி, போராடி எடுத்துரைத்தும் எந்த  பலனும் இல்லை.  கொடுத்த கூலியை குறைத்து வாங்குவது விசைத்தறி தொழில் சார்ந்த நஷ்டம். இந்த நிலை நீடித்தால் விசைத்தறி  தொழில் அழிந்துவிடும். கிராமப்புற பொருளாதாரம், வேலை  வாய்ப்பைத் தருவது விசைத்தறி தொழில். இதில் தமிழக அரசு  கவனம் செலுத்தாதது வேதனையளிக்கிறது என்று தெரிவித்த னர். மேலும் ஜவுளித்துறையில் நவீன தொழில்நுட்பத்தில் இயங்கும் சுல்சர், ரேப்பியர், ஏர்ஜெட் போன்ற நவீன தறிக ளால், நாடாவில் இயங்கும் சாதா விசைத்தறிகளுக்கு தனி ரகம்  ஒதுக்கீடு வழங்க வேண்டும், மின்கட்டண உயர்வில் இருந்து  பாதுகாக்க மத்திய மாநில அரசு சோலார் பேனல் 100 % திட் டத்தை அமல்படுத்தி விசைத்தறி தொழிலை பாதுகாக்க  வேண்டும், வரிச்சுமை அதிகரித்திருப்பதை  கண்டிக்கிறோம்.  மத்திய, மாநில அரசையும், கூலி உயர்வு மற்றும் கூலி  பில்லை கொடுக்க மறுக்கும் டெக்ஸ்டைல்ஸ் அதிபர்களை யும் கண்டித்து கோவை திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு  செய்யும் விசைத்தறி உரிமையாளர்களின் கூட்டமைப்பு ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.