districts

img

தாராபுரம் நகராட்சியில் பயோ மெட்ரிக் முறை அமல்படுத்த முடிவு

தாராபுரம், ஆக.31- தாராபுரம் நகராட்சியில் அலுவலக பணி யாளர்கள் குறித்த நேரத்திற்கு வருவதை உறுதி செய்ய பயோ மெட்ரிக் முறை அமல்ப டுத்தபடும் என நகராட்சி தலைவர் தெரிவித் துள்ளார். தாராபுரம் நகராட்சியின் வார்டு உறுப்பி னர்களுக்கான கூட்டம் நகராட்சி மன்ற அரங் கில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு நக ராட்சி தலைவர் பாப்புகண்ணன் தலைமை  வகித்தார். துணைத் தலைவர் ரவிச்சந்திரன், நகராட்சி ஆணையாளர் ராமர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

இக்கூட்டத்தில் நகராட்சி வார்டு உறுப்பினர்கள் பேசியதாவது:

வார்டு உறுப்பினர் ஹைடெக் அன்பழ கன், இரண்டாவது வார்டு பகுதியில் 20 ஆண்டு காலமாக புறம்போக்கு நிலத்தில் குடி யிருக்கும் நபர்களுக்கு தற்காலிகமாக மின்  இணைப்பு வழங்க வேண்டும். மழைக் காலத்தை முன்னிட்டு ஓடை பகுதிகளை தூர் வார வேண்டும், என்றார். அதற்கு தலைவர் உங்கள் கோரிக்கைகள் கூடிய விரைவில் நிறைவேற்றப்படும், என்றார். நாகராஜ்  தாராபுரம் - பொள்ளாச்சி சாலையில் சாக் கடை வடிகால் நீர் முறையாக வெளி யேற்ற முடியவில்லை. அதை முறையாக வெளியேற்றி ராஜவாய்க்காலில் கலப் பதற்கு திட்ட அறிக்கையை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மூலம் அரசுக்கு அளிக்க வேண்டும். மேலும் மன்ற பொருளாக  46 தீர்மானங்கள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. அதில் எனது 22 ஆவது  வார்டில் வளர்ச்சிப்பணிகள் குறித்து எந்த அறி விப்பும் இல்லை. அதிமுக வார்டு என்பதால்  என் வார்டை புறக்கணிக்க வேண்டாம். மக் கள் அனைவருக்கும் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டியது தலைவர் பொறுப்பு,  என்றார்.  தலைவர் பாப்பு கண்ணன் :  திமுக அரசு  பொறுப்பேற்றதிலிருந்து தாராபுரம் நகராட் சிக்கு வளர்ச்சிப் பணிகளுக்காக ரூ.7  கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. தேவைகளை முன்னுரிமை  அளித்து அனைத்து பகுதிகளுக்கும் திட்டங் கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. உங்கள் வார் டுக்கு என்ன தேவையோ அதை எழுதிக் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

எஸ்.முருகானந்தம் 

ஊராட்சி குப்பைகள் நகராட்சி எல்லைப் பகுதியான எனது 26 ஆவது வார்டில் கொண்டு  வந்து கொட்டி விடுகிறார்கள். இதனால் சுகா தார சீர்கேடு ஏற்படுகிறது குப்பைகளை அகற் றுவதற்கு இன்னும் வேகம் காண்பிக்க வேண் டும், என்றார். தலைவர் : இன்னும் ஒரு சில மாதங்களில் 79 நிரந்தர சுகாதார பணியாளர்கள் நிய மிக்கப்பட்டு விடுவார்கள் அதற்குப் பிறகு குப்பை தேக்கம் என்ற பேச்சுக்கே இடம் இருக் காது, என்றார்.

ஸ்ரீதர்

எனது 28 ஆவது வார்டில் போர்வெல்கள்  முறையாக இயங்கினாலும் குடிநீர் இணைப் புகள் செல்லும் பைப் லைன்கள் உடைந்து  துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பொது மக்களுக்கு போர் தண்ணீர் கொண்டு செல்வ தில் சிரமம் உள்ளது எனவே அதை சரி செய்ய  வேண்டும், என்றார். தலைவர் கு.பாப்பு கண்ணன்: உடனடி யாக சரி செய்து தரப்படும் என்றார். இக்கூட் டத்தில் 46 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டன. இதைத்தொடர்ந்து தலைவர் பாப்புகண் ணன் பேசுகையில், பொதுமக்கள் கோரிக் கைகளுக்கு நகராட்சி பணியாளர்கள் அதி காரிகள் முன்னுரிமை அளிக்க வேண்டும். சொத்துவரி, பிறப்புச் சான்றிதழ் இறப்பு சான் றிதழ் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு காலக்கெடுவுக்குள் உடனடியாக வழங்க வேண்டும். வழங்க இயலாத பட்சத்தில் எத னால் வழங்கப்படவில்லை என்பதை அவர் கள் செல்போனுக்கு தெரிவிக்க வேண்டும். நகராட்சி அலுவலகத்தில் பணியாளர்கள்  குறிப்பிட்ட நேரத்திற்கு வருவதில்லை. எனவே பயோமெட்ரிக் முறையை அமுல்ப டுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ் வாறு பாப்புகண்ணன் பேசினார்.  இந்த கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் ராஜேந்திரன், முகமது யூசுப், முபாரக் அலி,  முத்துலட்சுமி, தேவி அபிராமி, தனலட்சுமி, சக்திவேல் சீனிவாசன் உட்பட நகராட்சி ஊழி யர்கள் கலந்து கொண்டனர்.