districts

img

கல்லாபுரம் அமராவதி ஆற்றில் முதலை நடமாட்டம்

உடுமலை, பிப்.25 - அமராவதி ஆற்றின் கரை  பகுதியில் சில மாதங்களாக  முதலைகள் நடமாட்டம் அதி கமாக இருப்பதால் பொது மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். உடுமலை அமராவதி  அணையில் இருந்து உடு மலை கல்லாபுரம், மடத்துக்குளம் கொழுமம், கணி யூர் வழியாக தாராபுரம் மற்றும் கரூர் வழியாகச் சென்று  காவிரி ஆற்றில் கலக்கும் அமராவதி ஆற்றின் தண்ணீர் பல  ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கும் ஆயிரக்கணக்கான  கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக உள்ளது. அமராவதி  ஆறு அணை பகுதியில் இருந்து காவிரி ஆற்றுக்கு செல்லும்  பகுதி முழுவதும் பொதுமக்கள் வசிக்கும் ஊர் பகுதியில்  செல்வதால் ஆற்றில் பொது மக்கள் பயன்பாடு அதிகமாக  இருக்கும்.  இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ஆற்றில் முதலை கள் தென்பட்ட நிலையில், தற்போது அணையில் இருந்து முதல் கிராமமான கல்லாபுரம் பகுதியில் பொது மக்கள் பயன் படுத்தும் பாலத்தின் அருகே முதலைகள் இருப்பது பொது  மக்களுக்கு பயத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து பொது மக்கள் தெரிவிக்கையில், அமராவதி  அணையின் மிக குறைந்த தொலைவில் இருக்கும் ஊர் பகு திகளில் முதலைகள் தென்படுவது குறித்து வனத்துறை அதி காரிகள் உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும். அணையின் கரைப்பகுதியில் வனத்துறை சார்பில் பராமரிக்கப்பட்டு வரும்  முதலை பண்ணைகள் உரிய முறையில் பாதுகாக்க  வேண் டும் என்றார்கள்.