சேலம், ஜூன் 20- அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, சிபிஎம் சேலம் மாநகர கிழக்கு குழு சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய மோடி அரசின் இந்திய ராணுவத்தை காண்ட் ரெக்ட் விடும் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சிபிஎம் சேலம் மாநகர கிழக்கு குழு சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சேலம் கிழக்கு மாநகர செயலாளர் பொன்.ரமணி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.வெங்கடபதி, பி. ராமமூர்த்தி, மாவட்ட குழு உறுப்பினர் ஆர்.வைரமணி உள் ளிட்ட சேலம் கிழக்கு மாநகர குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் திரளானோர் பங்கேற்றனர்.