districts

img

அதானியை கைது செய்யக்கோரி சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்

உடுமலை, நவ.29- சூரிய மின் சக்தி மின்சாரம் ஒப்பந்தம் செய்ய முறை கேடு செய்த அதானியை கைது செய்ய வலியுறுத்தி தாராபு ரம், உடுமலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண் டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உடுமலை ஒன்றியம்: பல ஆயிரம் கோடி முறைகேடுகளில் ஈடுபட்ட அதா னியை கைது செய்ய வலியுறுத்தி பள்ளப்பாளையம் கனரா  வங்கியின் முன்பு வியாழனன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் உடுமலை ஒன்றியக்குழு உறுப்பினர் ராஜகோபால் தலை மையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மாவட்டக்குழு  உறுப்பினர் கனகராஜ், ஒன்றியச் செயலாளர்  ஜெகதீசன் ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். ஒன்றிய குழு உறுப் பினர்கள் அருண்பிரகாஷ், மாசாணி விவசாயத் தொழிலா ளர் சங்கத்தின் ஒன்றியத் தலைவர் ரங்கராஜ் உள்ளிட்ட திரளா னோர் கலந்து கொண்டு அதானியை கைது செய்யக்கோரி முழக்கமிட்டனர். தாராபுரம்: அதேபோல் தாராபுரம் அண்ணா சிலை முன்பு அதா னியை கைது செய்யக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  தாராபுரம் தாலுகாக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.பொன்னான் தலைமை  வகித்தார். இதில், மாவட்டக் குழு உறுப்பினர் என்.கனகராஜ்,  கோவிந்தராஜ், கே.மேகவண்ணன், ஆகியோர் கோரிக்கை களை விளக்கி பேசினர். இதில் திரளானோர் பங்கேற்றனர்.