மனைப்பட்டா கேட்டு சிபிஎம் மனு
தருமபுரி, ஆக. 23- ஏமானூர் கிராம மக்களுக்கு மனைபட்டா, வீடு இல்லாதவர்களுக்கு அரசு வீடு வழங்க மார்க்சிஸ்ட் கட்சியினர் தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தியிடம் மனு அளித்தனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏ.குமார், மாவட்டக் குழு உறுப்பினர் ஏ.ஜீவானந்தம் ஆகியோர் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது, தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட் டம், ஏரியூர் ஒன்றியம், நாகமரை ஊராட் சிக்கு உட்பட்ட ஏமனூர் கிராமத்தில் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்ற னர். மேட்டூர் அணை கட்டுவதற்கு நிலம் அளித்த இம்மக்களுக்கு ஆங்கிலேயர் ஆட் சிக்காலத்தில் குடியிருக்கவும், சாகுபடி செய் யவும் இப்பகுதியில் சுமார் ஆயிரம் ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. 1996-97-ஆம் ஆண்டு களில் 314 பேருக்கு வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டுள்ளது. அரசு தொடக்கப் பள்ளி, நடுநிலைப்பள்ளி கட்டிடங்கள், துணை சுகாதார நிலையம், ரேசன் கடை ஆகிய அரசு கட்டிடங்கள், ஐம்பது தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டுள்ளது. பழங்குடி மலை வாழ் மக்கள் பத்து குடும்பங்கள் வாழ்ந்து வருகிறார்கள். பழங்குடி மக்களுக்கு இது வரை வீட்டுமனை பட்டா எதுவும் வழங்கப்பட வில்லை. எனவே அனைவருக்கும் பட்டா வழங்கவும், ஏரியூர் ஊராட்சி ஒன்றியத்தில் இருந்து நாகமரை பஞ்சாயத்து ஏமனூர் கிரா மத்திற்க்கு 66 தொகுப்பு வீடுகள் அரசாங் கம் அறிவிக்கப்பட்டுள்ளது. பணி செய்ய இது வரை ஆணை வழங்கப்படவில்லை. அதை யும் வழங்க வேண்டும். மேலும், விவசாயி கள் காலம்காலமாக சாகுபடி செய்து வரும் நிலத்தில், முள்செடி நடும் முயற்சியில் வனத் துரை ஈடுபட்டு வருகிறது. இதனால் இப்பகுதி விவசாயகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்ப டும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, விவசாயிக ளின் சாகுபடி நிலத்தில் வனத்துறை முள்செடி நடுவதை தடுத்து நிறுத்தவும், புறம்போக்கு நிலங்களில் சாகுபடி செய்து வரும் விவசாயி களுக்கு பட்டா வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஷ பூச்சி கடித்த தூய்மைப்பணியாளர் மருத்துவமனையில் அனுமதி
கோவை, ஆக.23- பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படா ததால், தூய்மைப்பணியில் ஈடுபட்டிருந்த பணியாளரை விஷ பூச்சி கடித்ததால் ஆபத் தான நிலையில் கோவை அரசு மருத்துவ மன்னையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். கோவை மாநகராட்சி மத்திய மண்ட லத்தில் 66 ஆவது வார்டில் பணியாற்றி வருபவர் அருண்குமார். இவர் வழக்கம் போல் வெள்ளியன்று காலையில் கோவை மாவட்டம், புலியகுளம் கிட்னி சென்டர் அருகே, மாநகராட்சி பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் குப்பை லாரியில் பணிகள் மேற்கொண்டு வந்து உள்ளார். இந்நிலையில், திடீரென அவருக்கு அதிக அளவில் வியர்வை வெளியேறியும், முகம், கை, கால்கள் வீங்கிய நிலையில் மயக்கம் வருவதாக உடன் பணியாற்றியவரிடம் தெரிவித்து உள்ளார். இதை அடுத்து அவர் விஷ பூச்சி கடித்ததால் இப்படி நடந்து இருக்கும் என்று கருதி உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்து உள்ளனர். அருண்குமாரை கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்து உள்ளனர். தற்பொழுது அருண்குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தூய்மைப் பணியாளர்களின் உயிரோடு விளையாடாமல், பணியின் போது அவர்க ளுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்கிட வேண்டும் என சமூக செயற்பாட்டாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
பயிற்சி மருத்துவர் தற்கொலை
கோவை, ஆக. 23- மதுக்கரை அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் தங்கும் விடுதியில் பயிற்சி மருத்துவர் மயக்க ஊசி அதிக மாக செலுத்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் மன்னார்காடு, அட் டப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் (29). கோவை மருத் துவக் கல்லூரி மருத்துவமனையில், இரண்டாம் வருடம் பொது அறுவை சிகிச்சை பிரிவில் படித்து வருகிறார். இவர் திருமலையம்பாளையத்தில் உள்ள தனது அத்தை சிவகாமி என்பவர் வீட்டில் இருந்து கொண்டு மதுக்கரை அரசு மருத்து வமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், சம்பவத்தன்று பணிக்கு வந்தவர் தனக்கு வயிற்று போக்கு ஏற்பட்டு உள்ளதாகவும், தனக்கு VENPLANT பொருத்துமாறு மதுக்கரை அரசு மருத்துவமனை தலைமை செவிலியர் மலானா என்பவரிடம் கூறி பொருத்தி உள்ளார். பிறகு மதுக்கரை அரசு மருத்துவமனையில் உள்ள பயிற்சி மருத்துவர்கள் தங்கும் அறைக்கு சென்று தூங்கி உள்ளார். மருத்துவர்கள் தங்கும் அறைக்கு சென்று பார்த்த பொழுது அறை திறந்த நிலையிலும், சந்தோஷ் தூங்கிய நிலையில் இருந்து உள்ளார். பின்னர் பணி முடித்து சென்று சந்தோஷை எழுப்பிய பொழுது அவர் இறந்தது தெரியவந்து உள்ளது. இது குறித்து மதுக்கரை காவல் துறைக்கு தகவல் தெரி வித்ததன்தகவலின் பேரில், சந்தோஷ் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் மருத் துவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் பணிச்சூழல் பிடிக்காமல் ஒடிசா இளம் தொழிலாளி தற்கொலை
திருப்பூர், ஆக. 23 - திருப்பூர் சுல்தான்பேட்டை பகுதியில் தனியார் பனியன் நிறுவனத்தில் செக்கிங் வேலைக்குச் சேர்ந்த சூரியகாந்த் மொஹந்தி (வயது 18) என்ற ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இளம் தொழிலாளி, பணிச்சூழல் பிடிக்காத நிலையில், தற் கொலை செய்து கொண்டார். ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஏழைத் தொழிலாளி ரமேஷ் மொஹந்தி. இவரது மகன் சூரியகாந்த் மொஹந்தி. கடந்த 25 நாட்களுக்கு முன்பு வேலை தேடி திருப்பூருக்கு வந்திருக் கிறார். அவருக்கு இங்கிருக்கும் பணிச்சூழலும், வாழ்க்கை சூழலும் ஏற்க முடியாமல் சொந்த ஊருக்கு வருவதாக பெற் றோரிடம் தெரிவித்திருக்கிறார். ஆனால் குடும்ப வறுமை யைக் காரணம் காட்டி திருப்பூரிலேயே வேலை செய்யும் படி அவரது குடும்பத்தினர் வலியுறுத்தியதாகக் கூறப்படுகி றது. இதனால் மன அழுத்தத்துடன் ஏமாற்றம் அடைந்த சூரி யகாந்த் மொஹந்தி ஆகஸ்ட் 20 அன்று தான் தங்கியிருந்த அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஒடிசா மாநில ஏஐடியுசி நிர்வாகிகள் மூலம் திருப்பூரில் இருக்கும் ஏஐடியுசி நிர்வாகிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து ஏஐடியுசி நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று உடனடியான உதவி பணிகளை செய்தனர். ஏஐடியுசி பனியன் சங்கச் செயலாளர் என்.சேகர், சிபிஐ புறநகர் மாவட்டச் செயலா ளர் கே.எம்.இசாக் மற்றும் நிர்வாகிகள் நேரில் சென்று உயிரிழந்த சூரியகாந்த் மொஹந்தியின் தந்தை உள்ளிட்ட நெருங்கிய உறவினர்களைச் சந்தித்து ஆறுதல் கூறி தேவையான உதவிகளைச் செய்தனர். பணியில் சேர்ந்து 20 நாட்களில் தொழிற்சாலைக்கு வெளியில் நடந்த மரணமாக இருந்தாலும் சம்பந்தப்பட்ட குடும்பத்திற்கு மனிதாபிமான அடிப்படையில் முறையான இழப்பீடு வழங்க கோரி தொழிற்சாலை நிர்வாகத்தோடு பேச்சுவார்த்தை நடத்தி ஈமச்சடங்கு மற்றும் பயணச் செல வுகள் ஆகியவற்றை வழங்க கோரி பெற்றனர். அத்து டன் இழப்பீடாக ரூ.3 லட்சம் பெற்று இறந்த இளம் தொழி லாளியின் குடும்பத்தாரின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. திருப்பூரை பொறுத்தவரை பல லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள். அவர் கள் வருகை குறித்து முறையான பதிவுகள் செய்ய வேண் டும் என்று இடதுசாரி தொழிற்சங்கங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தியபோதும், தொழிலாளர் துறை புலம் பெயர் தொழிலாளர்களைப் பதிவு செய்ய திட்டவட்டமான நடவ டிக்கை எதையும் மேற்கொள்ளவில்லை. மேலும் முறை யாக அனுமதி பெறாத கான்ட்ராக்ட் முறை உற்பத்தி என்பது திருப்பூரில் பெரும்பாலான நிறுவனங்களில் இருந்து வரு கிறது. தமிழ்நாடு அரசும், தொழிலாளர் நலத்துறையும் உரிய கவனம் செலுத்தி அனைத்து நிறுவனங்களிலும் உற் பத்தி துறையில் காண்ட்ராக்ட் முறை இருக்கக்கூடாது என்ற நிலையை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தியுள் ளனர்.
சிபிஎம் கிராம சபை கோரிக்கையை ஏற்பதாக ஊராட்சித் தலைவர் பதில்
திருப்பூர், ஆக.23- முதலிபாளையம் ஊராட்சி கரட்டாங் காடு பகுதியில் சாலையைச் சீரமைக்க வேண் டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிராம சபையில் வைத்த கோரிக்கை குறித்து ஊராட்சி மன்றத் தலைவர் மயூரிபிரியா பதலளித்துள் ளார். முதலிபாளையம் அருகே கரட்டாங்காடு பகுதியில் சாலை பழுதடைந்துள்ளது. இத னால் வாகன ஓட்டிகள் அருகாமையில் உள்ள பள்ளிகளுக்கு தங்கள் குழந்தைகளை கொண்டு செல்ல சிரமப்படுகின்றனர். இதை உடனடியாக சரி செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆகஸ்ட் 15 அன்று கிராமசபைக் கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக ஊராட்சி நிர்வாகத் தரப்பில் ஊராட்சிமன்றத் தலைவர் மயூரி பிரியா பதில் அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது, கரட்டாங்காடு பகுதியில் சாலையைச் சீர மைப்பது தொடர்பாக ஊராட்சியில் முடிவு செய்யப்பட்டு, மாவட்ட ஆட்சியரிடம் நிர் வாக அனுமதி பெற அனுப்பப்பட்டிருந்தது. தற்போது நிர்வாக அனுமதி கிடைத்துள்ளது. விரைவில் சாலை சீரமைக்கப்படும் என தெரி வித்துள்ளனர்.
ஆத்துப்பாளையத்தில் இன்று இலவச சிறப்பு மருத்துவ முகாம்
திருப்பூர், ஆக. 23 - கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் இலவச சிறப்பு மருத்துவ முகாம் முதலாவது மண்டலம் 10ஆவது வார்டுக்கு உட்பட்ட மாநகராட்சி ஆத்துப்பாளையம் நடுநிலைப் பள்ளியில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. இந்த மருத்துவ முகாமில், பொது மருத்துவம், இரு தய நோய் சிகிச்சை பிரிவு, சர்க்கரை நோய் சிகிச்சை பிரிவு, குழந்தைகள் சிகிச்சை பிரிவு, தோல் சிகிச்சை பிரிவு, கர்ப்பிணிகள் பரிசோத னை பிரிவு, பல் சிகிச்சை பிரிவு, காது, மூக்கு, தொண்டை பிரிவு, எலும்பு மூட்டு பரிசோ தனை பிரிவு, சித்த மருத்துவப் பிரிவு, குடும்ப நலம் பால்வினை நோய் பரிசோதனை பிரிவு உள்ளிட்ட சிறப்பு மருத்துவ பிரிவுகளும் கர்ப் பிணிகளுக்கான இலவச ஸ்கேன் பரிசோத னைகளும் மற்றும் இசிஜி பரிசோதனை மற் றும், சிறுநீர் மற்றும் இரத்த பரிசோதனை ஆகிய பரிசோதனைகள் பொது மக்களுக்கு இலவசமாக மேற்கொள்ளப்படும். மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் ்படி மாநகராட்சி ஆணையர் பவன்குமார் கிரியப்பனவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
வாரம் ஒரு முறை குடிநீர் விநியோகிக்க சிபிஎம் கோரிக்கை
திருப்பூர், ஆக.23 - தோட்டத்துப்பாளையம் பகுதியில் வாரத்திற்கு ஒரு முறை குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் பொது மக்கள் 2ஆம் மண்டல அலுவலகத்தில் வெள்ளியன்று மனு அளித்தனர். திருப்பூர் இரண்டாவது மண்டல அலுவலகத்தில் வெள்ளி யன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோட்டத்துப்பா ளையம் கிளைச் செயலாளர் மங்கலட்சுமி தலைமையில் பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, திருப்பூர் மாநகராட்சி இரண்டாவது மண்டலத்திற்கு உட்பட்ட தோட்டத் துப்பாளையம் பகுதியில் 1500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் குடிநீர் பிரச்சனை தொடர்ந்து வருகிறது. எங்கள் பகுதிக்கு 9 முதல் 15 நாட்க ளுக்கு ஒரு முறைதான் தண்ணீர் திறக்கப்படுகிறது. கிடைக் கக்கூடிய இந்த தண்ணீரும் நான்கு பேர் உள்ள ஒரு குடும் பத்திற்கு போதுமானதாக இல்லை. மூன்றே நாட்களில் தீர்ந்து விடுகிறது. மேற்கொண்டு தண்ணீருக்காக மாதத்தில் இரண்டு முதல் மூன்று முறை ரூ.500 செலவு செய்ய வேண்டியுள்ளது. மேலும் குடிநீருக்காக ரூ.35 கொடுத்து கேன் தண்ணீர் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. போர் வசதி உள்ள ஒரு சில வீடுகளும் போதுமான அளவிற்கு தண்ணீர் இருந்தும், குடிநீர் இல்லாமல் தவித்து வருகின்றனர். எனவே உரிய கவ னம் செலுத்தி நான்கு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள் ளது. கடந்த வாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து லாரி மூலம் தண்ணீர் விநியோகிக் கப்பட்டது. மேலும் உரிய கால இடைவெளியில் தண்ணீர் விநி யோகிப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தது குறிப்பிடத்தக் கது. இந்நிகழ்வில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு ஒன்றியச் செயலாளர் ஆர்,காளியப்பன், மாவட்டக்குழு உறுப் பினர்கள் ஆ.சிகாமணி, ஆர்.மைதிலி, ஒன்றியக்குழு உறுப்பி னர்கள் மகாலிங்கம், தன்ராஜ் உட்பட பொதுமக்கள் திரளா னோர் பங்கேற்றனர்.
புகார் தெரிவித்தால் அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை: ஒன்றியக்குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் குற்றச்சாட்டு
உடுமலை, ஆக. 23- உடுமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் தெரு விளக்குகள் எரிவ தில்லை என புகார் தெரிவித்தால், அதி காரிகள் கண்டு கொள்வதில்லை என உடுமலை ஒன்றிய அலுவலகத்தில் வெள்ளியன்று நடைபெற்ற ஊராட்சி ஒன்றியக் கூட்டத்தில் உறுப்பினர்கள் குற்றச்சாட்டினர். உடுமலை ஒன்றியக்குழுத் தலைவர் மகாலட்சுமி முருகன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் பேசுகையில், ஊராட்சிகளில் குடிநீர் மற்றும் தெரு விளக்குகள் குறித்த பொதுமக்கள் எங்க ளிடம் கூறும் புகார்களை ஒன்றிய அதிகா ரிகளிடம் தெரிவித்தால், எவ்வித நடவ டிக்கையும் எடுப்பதில்லை என்றனர். வட்டார வளர்ச்சி அலுவலர் உறுப்பி னர்களின் புகார்கள் குறித்து அதிகாரி கள் உடனடியாக ஆய்வு செய்வார்கள் என்று தெரிவித்தார். இருப்பினும் ஒன்றி யக்குழு உறுப்பினர்கள் தொடர் வாக்கு வாதம் செய்தனர். ஊராட்சி பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை சரி செய்ய வேண்டும். குடிநீர் வடிகால் துறையில் கூடுதல் வேலை ஆட்களை நியமனம் செய்ய வேண்டும். தற்போது கட்டுமானப் பொருட்களின் விலை உயந்துள்ளதை காரணம் காட்டி ஊராட்சி பகுதியில் நடைபெற்று வரும் பணிகள் தடை படக்கூடாது. பணிகள் முழுமையாக முடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். பின்னர் ஒன்றியப் பகுதியில் புதிய நலத்திட்ட பணிகள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது. இதில், வட்டார வளர்ச்சி அலுவ லர் பியூலா எப்சிபாய், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வாரச்சந்தைகளில் கூடுதலாக வரி வசூல்
தருமபுரி, ஆக. 23- வாரச்சந்தையில் கூடுதலாக வரி வசூல் செய்யப் படுவதாக, விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், விவசாயிகள் குற்றம்சாட்டினர். தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்ட அரங் கில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் வெள்ளியன்று நடைபெற் றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தலைமைவ கித்தார். இக்கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், பால் கொள் முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் மின்மாற்றி களை புதிதாக அமைத்து 24 மணி நேரமும் மின்சாரம் வழங்க வேண்டும். ஏரிகளுக்கு நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப் புகளை அகற்றி தூர்வாரவேண்டும், விவசாயிகள் குறைதீர்க் கும் நாள் கூட்டத்திற்கு வருவாய் கோட்டாட்சியர்கள் பங் கேற்க வேண்டும். மேலும், காட்டு பன்றிகளால் பயிர்கள் சேதம டைகின்றது. காட்டு பன்றிகளை சுட அனுமதிக்க வேண்டும், தருமபுரி பகுதியில் ஓடும் சனத்குமார் நதி ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர் வார வேண்டும், காவிரி ஆற்றில் கடலுக்கு 175 டிஎம்சி தண்ணீர் சென்று வீணாகிறது. காவிரி உபரிநீர் திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், வார சந்தைகளில் விவசாயிகளிடம் கூடுதலாக சுங்கம் வசூலிப் பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இக்கூட்டத்தில் டிஆர்ஒ பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், கோபாலபுரம் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநர் பிரியா, தர்மபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை (பாலக்கோடு) ரவி, கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் இளவரசன், வேளாண்மை இணை இயக்குநர் குணசேகரன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் மலர்விழி, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் பாத்திமா, அரசுத்துறை அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
தடாகம் பகுதியில் செங்கல் சூளைகள் இயங்க தடை தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
கோவை, ஆக. 23- தடாகம் பகுதியில் செங்கல் சூளைகள் இயங்க தடை விதித்து தேசிய பசுமை தீர்ப்பா யம் உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டம், தடாகம் பகுதியில் செங்கல் சூளைகள் செயல்பட்டு வந்தன. அனுமதியற்ற முறையிலும், மாசு ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால் செங்கல் சூளைகள் ஏற்கனவே மூடப்பட்டு உள்ளன. மின் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டு உள் ளன. செங்கல் சூளைகள் மீண்டும் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று ஒரு தரப்பின ரும், நிரந்தர தடை வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் தேசிய தீர்ப்பாயம் மற்றும் நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தனர். தடாகம் பகுதியில் செங்கல் சூளைக ளுக்கு நிரந்தர தடை கோரி நஞ்சுண்டா புரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் மாணிக்க ராஜ் என்பவர் தேசிய பசுமை தீர்ப்பாயத் தில் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனு மீது வெள்ளியன்று விசாரணை நடத்திய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாய உறுப்பினர் சத்யகோ பால் ஆகியோர் செங்கல்சூளைகள் இயங்க தடை விதித்து உத்தரவிட்டனர். இந்த உத்தரவில் கூறியதாவது, சட்ட விரோத செங்கல்சூளைகளை முற்றிலும் அகற்ற வேண்டும். அனுமதியின்றி சூளை கள் செயல்படும் போது அது சட்ட விரோத மாக கருதப்படுகிறது. இயற்கை எரிவாயு, நிலக்கரி போன்றவற்றை எரிபொருளாக செங்கல்சூளைகள் பயன்படுத்தி இருக்க வேண்டும். விறகு முதலியவற்றை பயன்ப டுத்தக் கூடாது. 2022 ஆம் ஆண்டுக்கு முன்போ, பின்போ எந்த சூழ்நிலையில் தொடங்கப்பட்டாலும் விதிமுறைகளை பின் பற்றாவிட்டால் அது தொடர்ந்து செயல்பட அனுமதிக்க முடியாது. சட்ட பூர்வமாக தேவையான அனைத்து அனுமதி, உரிமங்கள் மற்றும் சம்மதத்தை பெற்று இருந்தால் மட்டுமே சட்ட பூர்வமாக இருக்க முடியும். ஆனால், இங்கு அப்படி அல்ல. பல செங்கல்சூளைகள் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 300 மீட்டருக் குள் உள்ளன. உரிமம் இல்லாமலும், விதிமுறை மீறலு டனும் செயல்படும் செங்கல்சூளைகள் நடத் தினால் உடனடியாக மூட உத்தரவிட வேண் டும். செயல்பட அனுமதிக்க முடியாது. மாசு கட்டுப்பாட்டு வாரியம் தனது அதிகாரிக ளுக்கு சரியான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள் ளது.