கோவை, ஜன. 17- பொங்கல் திருவிழாவையொட்டி கோவை பட்டணம் பகுதியில் சலங்கை கட்டி ஆடும் திருவிழா செவ்வாயன்று நடைபெற்றது. 200 ஆண்டுகளாக நடைபெறும் இவ்விழாவை முதன்முறையாக பார்ப்பவர்கள் மிகுந்த ஆச்சரியத்துடன் கண்டு களித்தனர். கோவை மாவட்டம் சூலூர் அருகே பட்டணம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் குட்டக்காரன் அய்யன் கோயில் என்ற கோவில் உள்ளது. 200 ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்த இந்த கோவிலில் உள்ள தெய்வங்களை வழிபடும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் மூன்றாம் நாள் காணும் பொங் கலன்று ஜலக்கிருதை எனப்படும் எருதாட்டம் நடத்தப்படு கிறது. கோவிலுக்காக வளர்க்கப்பட்ட மாட்டை கொண்டு ஒரு வர் ஆட அதை பார்த்து உரிமி இசைக்கு ஏற்ப மாடுகளும் ஆடுகிறது. மாடுகளை விதவிதமாக அலங்காரம் செய்யப் பட்டு இந்த ஜலகிருதயணப்படும் மாட்டு சலங்கை ஆட் டத்திற்கு கொண்டு வரப்படுகிறது. கடந்த 200 ஆண்டு களாக நடத்தப்படும் இந்நிகழ்வை முதன்முறையாக காண்ப வர்கள் மிகுந்த ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர். இந்த நிகழ்வில் பட்டணம் ஊராட்சி தலைவர் கோமதி செல்வகுமார் மற்றும் திமுக இலக்கிய அணி செல்வகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.