districts

வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி ஏலம்

அவிநாசி,ஜூலை 18- அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் பருத்தி ஏல வர்த்த கம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த  வாரம் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் மொத்தம்  752 பருத்தி மூட்டைகள் வந்திருந்தன.  இதில், ஆர்.சி.எச். பி.டி.ரகப்பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு  ரூ. 3900 முதல் ரூ.4610 வரையிலும், கொட்டுரகப்(மட்டரக) பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 1000 முதல் ரூ.1800 வரையிலும் ஏலம் போனது.  பருத்தி ஏல மையத்தில்  மொத்தம் ரூ.9 லட்சத்து 59 ஆயிரத்துக்கு பருத்தி ஏல வர்த்தகம் நடைபெற்றது.

 இந்த ஏலத்தில், ஆத்தூர், மேட்டூர், கோபி, நம்பியூர், புளியம்பட்டி, குன்னத் தூர், கோவை, ஈரோடு ஆகிய பகுதியிலிருந்து ஏராளமான வியாபாரிகளும் ஏலத்தில் பங்கேற்றனர்.

;