districts

img

திருப்பூர் தனியார் பள்ளிகளுக்கு சொத்து வரி

திருப்பூர், ஜன.31 - திருப்பூர் மாநகராட்சியில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு 2018 ஆம் ஆண்டு முதல் சொத்து  வரி விதிப்பது என்று மாமன்ற கூட் டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருப்பூர் மாநகராட்சி மாமன்ற கூட்டம் செவ்வாயன்று மேயர்  தினேஷ்குமார் முன்னிலையில் நடைபெற்றது. மாநகராட்சி ஆணை யாளர் கிராந்தி குமார் பாடி, துணை மேயர் ஆர்.பாலசுப்ரமணியம், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். கடந்த டிசம்பர் 30ஆம் தேதி நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் ஒத்திவைக்கப்பட்ட தீர்மானம் இக்கூட்டத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில்  மாநகராட்சியில் உள்ள தனியார்  பள்ளிகளுக்கு சொத்து வரி  விதிப்பது குறித்து விவாதிக்கப் பட்டது. முன்னதாக இப்பொருள் குறித்து விளக்கம் அளித்த ஆணை யாளர் கிராந்தி குமார் பாடி, தனி யார் பள்ளி கட்டிடங்கள் சுமார் 10,000  சதுர அடி மற்றும் விளையாட்டு மைதானம் 2 ஏக்கர் என்று கணக்கிட் டால் கூட சொத்து வரி மற்றும்  காலியிட வரி என்ற முறையில் ஆண்டுக்கு சுமார் ஆறு லட்ச ரூபாய் வரி விதிக்க வேண்டி இருக்கும். மொத்தம் 24 பள்ளி களை கணக்கிட்டால் மாநக ராட்சிக்கு ஆண்டுக்கு தோராய மாக 10 முதல் 12 கோடி ரூபாய்  வரை வருமானம் வர வாய்ப் புள்ளது. தனியார் பள்ளிகள் அவர்களது சொத்து வரி விதித்துக் கொள்ள தேவையான சொத்து ஆவணங்கள், திட்ட அனுமதி நகல்,  இதர ஆவணங்களின் நகல்கள் ஆகியவற்றை மாநகராட்சியில் அளிக்க கடந்தாண்டு ஏப்ரல் முதல்  காலக்கெடு கொடுத்தும் ஒரே ஒரு  பள்ளி நிர்வாகம் கூட ஆவணங் களை ஒப்படைக்கவில்லை. சொத்து வரி விதிக்கப்படும் நிலை யில் அவர்கள் வழக்கிற்கு போகா மல் இருப்பதற்கு ஒத்துழைப்பு முறையில் வரி விதிக்கலாம் என்று  கூறினார்.

இதன் மீது விவாதத்தில் பங் கேற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி , அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் மாமன்ற உறுப்பினர்கள், தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் மிக  அதிக அளவில் கட்டணம் வசூலிக் கின்றனர். எனவே அவர்களுக்கு சலுகை காட்ட வேண்டியது இல்லை. அரசு வழிகாட்டுதல் படி  2018 ஆம் ஆண்டு முதல் கணக் கிட்டு சொத்து வரி விதிக்கலாம். இந்தத் தீர்மானத்தை நிறை வேற்றிவிட்டு அவரிடம் வரி வசூல்  செய்வதற்கு சட்டரீதியான வழி முறைகள் பற்றியும் நிபுணர் களிடம் கருத்து கேட்டு வரி வசூல்  செய்யலாம் என்று வலியுறுத்தி கூறினர். இதையடுத்து 2018 - 19 ஆம் நிதி  ஆண்டு முதல், தனியார் பள்ளி களுக்கு சொத்து வரி விதிப்பது என்று ஒரு மனதாக தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் பேசிய இந்திய  கம்யூனிஸ்ட் கட்சி மாமன்ற உறுப் பினர் எஸ்.ரவிச்சந்திரன், மாநக ராட்சி ஒப்பந்த தொழிலாளர் களுக்கு குறைந்தபட்ச ஊதிய நிர்ணயம் குறித்து மாமன்றத்தில் சிறப்பு தீர்மானம் கொண்டு வர  வேண்டும், அதை அரசின் கவனத் திற்கு கொண்டு செல்ல வேண்டும்  என்று கூறினார். எனினும் இதுகுறித்து கலந் தாலோசித்து பின்னர் தீர்மானம் கொண்டு வரலாம் என்று மேயர் தினேஷ்குமார் கூறினார். மாநகரில் குடிநீர் கசிவுகளை சீர மைக்க சிறப்பு கவனம் செலுத்தப் படும். ஆயிரத்துக்கும் மேற்பட்ட  இடங்களில் குடிநீர் கசிவு பிரச்சனை  உள்ளது. மண்டலத்திற்கு குறைந்த பட்சம் 20 பணியாளர்கள் என்ற அளவில் கசிவுகளை சரி செய்யும் பணியில் ஈடுபடுத்தவும், பிப்ரவரி மாதம் இப்பிரச்சனையில் சிறப்பு கவனம் செலுத்தவும் முடிவு செய்து இருப்பதாகவும் மேயர் தினேஷ்குமார் கூறினார்.

நான்காவது குடிநீர் திட்டம் செயல்பாட்டிற்கு வர உள்ள நிலையில் அதற்கு செண்டேஜ் மற்றும் இதர கட்டண விவரங் களை மக்களுக்கு தெளிவாக தெரி விக்க வேண்டும் என்று மாமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இது பற்றி நாளிதழ்களில் அறிவிப்பு  செய்யலாம் என மேயர் பதில ளித்தார். திருப்பூர் கலைஞர் பேருந்து நிலையத்தில் கழிப்பிட வசதி குறை வாக உள்ளது. சிறுநீர் கழிப்பிடத் திலிருந்து கழிவு நீர் அருகில் உள்ள  கட்டிடத்திற்கு செல்கிறது. அங்கு வரும் மக்கள் முகம் சுளிக்கும் நிலை  உள்ளது. எனவே இப்பிரச்ச னையை உடனடியாக தீர்க்க வேண்டும் என்று அப்பகுதி மாமன்ற  உறுப்பினர் கண்ணப்பன் கூறி னார். கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த மேயர் தினேஷ்குமார், திடக்கழிவு மேலாண்மை பிரச் சனை மிகப் பெரும் சவாலாக உள்ளது. இப்பிரச்சனையை தீர்ப்பதற்கான அனைத்து வழி முறையும் ஆராயப்படும் என்று கூறி னார்.

தற்போது இரண்டாவது குடி நீர் திட்டத்தில் 23 எம்எல்டி குடிநீர்,  மூன்றாவது திட்டத்தில் 125 எம் எல் டி  குடிநீர் வந்து கொண்டிருக்கிறது. நான்காவது குடிநீர் திட்டத்தின் மூலம் 50 எம் எல் டி குடிநீர் கிடைக் கும். தற்போது கிடைப்பதை விட  மூன்றில் ஒரு பங்கு குடிநீர் கூடுத லாக கிடைக்கும் போது மாநகரில்  மக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யும் கால இடைவெளி வெகு வாக குறையும் என்றும் மேயர் கூறி னார். அனைத்து வார்டுகளிலும் உள்ள மனை பிரிவுகளில் ரிசர்வ் சைட்டுகள் பற்றிய விபரங்களை பட்டியல் எடுத்து அவற்றின் தற் போதைய நிலவரம் குறித்தும் அந்தந்த வார்டு மாமன்ற உறுப்பி னர்களுக்கு அளிக்க வேண்டும்  என்றும் கோரிக்கை வைக்கப் பட்டது. இது குறித்தும் அதிகாரி களுக்கு மேயர் அறிவுறுத்தினார். திருப்பூர் பூ மார்க்கெட் தென் புறம் 11 தற்காலிக கடைகளை அகற்றவும் தீர்மானம் நிறைவேற் றப்பட்டது. குடியிருப்பு மனை பிரிவுகள்  அமைப்பதற்கு நகர அமைப்பு  துறையில் அனுமதி கொடுக்கப் பட்டாலும், அங்கு சாலை கழிவுநீர்  வெளியேற்ற உள்ளிட்ட பிரச்ச னைகள் பற்றி மாநகராட்சி இள நிலை பொறியாளர்கள் ஆய்வு செய்து தெரிவிக்க வேண்டும். அது பற்றி சம்பந்தப்பட்ட பகுதி மாமன்ற உறுப்பினர்களுக்கு தெரி விக்க வேண்டும் என கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் கூறினர்.

ஆணையருக்கு வாழ்த்து

திருப்பூர் மாநகராட்சி ஆணை யாளராக செயல்பட்டு வரும்  கிராந்தி குமார் பாடி கோவை மாவட்ட ஆட்சியராக பொறுப் பேற்க தமிழக அரசால் அறிவிக்கப் பட்டுள்ளார். திருப்பூர் மாமன்ற கூட்டத்தில் அவருக்கு மேயர் மற்றும் அனைத்து கட்சி மாமன்ற  உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித் தனர். திறமையான இளம் அதிகாரி  மட்டுமின்றி, நேர்மையாகவும்  அவர் செயல்பட்டார். திருப்பூர்  மாநகருக்கு சம்பளம் பெறும் அதி காரியாக மட்டுமில்லாமல், உணர்வுப்பூர்வமாக நகரின் மேம் பாட்டுக்காக அவர் செயல்பட்டார் என்று பலரும் அவரை குறிப்பிட் டனர். மாமன்ற கூட்ட முடிவில்  அனைவரும் பலத்த கரவொலி  எழுப்பி அவருக்கு வாழ்த்து  தெரிவித்தனர்.
 

;