districts

img

மக்களை அலைக்கழிக்கும் பல்லடம் சார்பதிவாளர்களுக்கு கண்டனம்

திருப்பூர், ஜூன் 1 – பல்லடத்தில் ஆவணப் பதிவுக்கு வரக்கூடிய சாமானிய  ஏழை, எளிய மக்களை ஏதேனும் காரணங்கள் சொல்லி அலைக்கழிக்கும் சார் பதிவாளர்களுக்கு ஆவண எழுத்தர்  மற்றும் வழக்கறிஞர் கூட்டமைப்பினர் கண்டனம் தெரிவித் துள்ளனர். பல்லடத்தில் ஆவண எழுத்தர், வழக்கறிஞர் கூட்டமைப் பின் ஆலோசனைக் கூட்டம் செவ்வாயன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆவண எழுத்தர் வழக்கறிஞர் கூட்டமைப்பு தலைவராக ஆவண எழுத்தர் ஜெகதீசன், செயலாளராக வழக்கறிஞர் சக்திவேல், பொருளாளராக ஆவண எழுத்தர்  மு.பாலசுப்பிரமணியன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: பல்லடம்  சார் பதிவாளர் ஈஸ்வரி, பிரவீனா ஆகியோர் பதவிக்கு வந்த தில் இருந்து ஆவண எழுத்தர்கள் மற்றும் ஆவணம் தயார்  செய்து கொண்டு வரும் பொது மக்களை தேவையில்லாமல்  அலைக்கழிப்பு செய்கின்றனர்.

ஆவண பதிவுக்குத் தேவை யற்ற ஆவணங்களை சமர்ப்பிக்க கட்டாயப்படுத்தியும், ஆவ ணத்தை பதிவுத்துறை விதிமுறைகளுக்கு உட்பட்டு திருப்பா மல் எவ்வித விளக்கமும் இன்றி பதிவுக்கு ஏற்காமல் பேரம்  பேசி திருப்பி அனுப்பும் போக்கை வன்மையாகக் கண்டித் துள்ளனர். பல்லடம் சார் பதிவாளர் அலுவலகம் 39 கிராமங்களை உள் ளடக்கிய மிகப்பெரிய பதிவுத்துறை அலுவலகம் ஆகும்.  இங்கு தினமும் குறைந்தது 100 முதல் 150 ஆவணங்கள் பதி வுக்குத் தாக்கல் செய்யப்படுகிறது. இதனால் அரசுக்கு மிகப் பெரும் வருமானம் கிடைக்கிறது. ஆனால் சார்பதிவாளர்கள்  இருவரும் ஆவணங்களை பதிவு செய்வதற்கு இழுத்தடித்து  அலைக்கழிப்பதால் விவசாயிகள், பொது மக்கள் மிகவும் சிர மத்துக்கு ஆளாகி பதிவு தடைபடுகிறது. அரசுக்கு வருவாய்  இழப்பு ஏற்படுவதுடன், தமிழக அரசுக்கும் கெட்ட பெயர் ஏற்ப டுத்தி பதிவுத் துறைக்கு களங்கம் ஏற்படுகிறது. ஆவண எழுத்தர்களையும், வழக்கறிஞர்களையும் மதிக் காமல் தான்தோன்றித்தனமாக இரு சார் பதிவாளர்களும் செயல்படுவது கண்டிக்கத்தக்கது. சார் பதிவாளர் அலுவல கத்தில் நிரப்பப்படாமல் உள்ள இரவு நேர காவலர், உதவி யாளர் பணியிடங்களை நிரப்பவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

;