districts

img

மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவு திரட்டிய கல்லூரி மாணவர்!

தில்லியில் போராடி வரும் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக கோவையில் கல்லூரி மாணவர் பொதுமக்களிடம் ஆதரவு திரட்டினார்.

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சிங் மீதான பாலியல் குற்றச்சாட்டை அடுத்து அவரை கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி மல்யுத்த வீரர்கள் தொடர் போராட்டத்தில்

ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் மகளிர் அமைப்பினர், தொழிற்சங்கத்தினர் என பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கோவையில் இன்று காலை  கல்லூரி மாணவர் ஸ்டீபன் என்பவர் கோவை பந்தயசாலையில் நடைபயிற்சி செல்வோரிடம் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவு திரட்டினார். மேலும், மல்யுத்த வீரர்களுக்கு துணையாக நாம் இருப்போம் என்பதை வலியுறுத்தும் பொருட்டு பொதுமக்களிடம் தான் அணிந்திருக்கும் டி-சர்டில்  கையெழுத்து பெற்று  அதை அனுப்ப இருக்கிறேன் என்றார்.

;