அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கோவை மேற்கு நகரக்குழு மாநாடு சனியன்று நடைபெற்றது. இதில், மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஏ.ராதிகா மற்றும் நிர்வாகிகள் வனஜா ஆகியோர் பங்கேற்று உரை யாற்றினர். இதைத்தொடர்ந்து சங்கத்தின் மேற்கு நகர தலைவராக லட்சுமி, செயலாளராக மயிலாத்தாள், பொருளாளராக செல்வி உட்பட 13 பேர் கொண்ட நகரக் குழு தேர்ந்தெடுக்கப்பட்டது.