districts

img

கோவை: சிபிஎம் வேட்பாளர்கள் தீவிர வாக்குசேகரிப்பு

கோவை, பிப்.14- கோவை மாவட்டத்தில் உள்ள  மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி களில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற் போக்கு கூட்டணியின் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். திமுக தலைமையிலான மதச்சார் பற்ற முற்போக்கு கூட்டணியின் சார் பில் கோவை சூலூர் பேரூராட்சி 7  ஆவது வார்டில் போட்டியிடும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  வேட்பா ளர் எம்.வேலுச்சாமி, கூட்டணி கட்சி களின் தலைவர்களுடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.  கோவை ஆலாந்துறை பேரூராட்சி  15 ஆவது வார்டில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சியின்  வேட்பாளர் பி. வெண்ணிலா கூட்டணி கட்சிகளின் தலைவர்களுடன் தீவிர வாக்கு சேக ரிப்பில் ஈடுபட்டார். கோவை இடிகரை பேரூராட்சி யில், மார்க்சிஸ்ட் கட்சியின்  வேட்பா ளர்களாக 8 ஆவது வார்டில் போட்டி யிடும் கே.சௌந்திரராஜன், 13  ஆவது வார்டில் போட்டியிடும் கே.கற்பகம் ஆகியோர் கூட்டணி கட்சிகளின் தலை வர்கள் படை சூழ தீவிர வாக்கு சேகரிப் பில் ஈடுபட்டனர். கோவை இருகூர் பேரூராட்சியில் மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர் களாக போட்டியிடும் 3 ஆவது வார்டு  ஏ.ராஜேஷ்வரி, 8 ஆவது வார்டு எஸ்.ஸ்டாலின்குமார் ஆகியோர் கூட்டணி கட்சிகளின் தலைவர்களுடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.  மதுக்கரை நகராட்சி 20 ஆவது வார்டில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் டாக்டர் அ.சிவசங்கரி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இவருக்கு ஆதரவு கேட்டு திமுக, காங்கிரஸ், சிபிஐ, மதிமுக, கொமதேக உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.