கோவை, ஏப்.3- ஆதிதிராவிடர் காலனியில் வசிக்கும் மக்களுக்கு இலவச பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் வாக்கு றுதி அளித்தார். இந்தியா கூட்டணியின் கோவை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார். அதன் ஒரு பகுதியாக, புதனன்று பாப் பம்பட்டியில் பிரச்சாரத்தை துவக்கிய திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார், வீதி வீதியாக சென்று மக்களை சந்தித்து வாக்குகளை சேகரித்தார். கள்ளப்பாளையம், சின்னகுயிலி, பெரியகுயிலி, பொன்னாகாணி, பச்சார்பாளையம், அக்கநா யக்கன்பாளையம், சுல்தான்பேட்டை பகுதிகளில் பிரச்சா ரம் மேற்கொண்டார். தொடர்ந்து சின்னகுயிலியில் வாக்களர்கள் மத்தியில் பேசிய வேட்பாளர் கணபதி ராஜ்குமார், ஆதிதிராவிடர் கால னி மக்களுக்கு இலவச பட்டா வழங்கவும், அவர்க ளுக்கு சமுதாய நலக்கூடம் கட்டிக்கொடுக்கவும், நடவடிக்கை எடுக்கப்படும். குடிநீர் பிரச்சினைகள் தீர்க்கப்படும், நிலத்தடி நீர் மட்டம் உயர, குளம் குட்டைகளுக்கு பரம்பிக்கு ளம் ஆழியாறு வாய்க்காலில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து நிரப்ப முதல்வரிடம் கூறி நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தார். இந்த பிரச்சாரத்தின்போது, இந்தியா கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் உடனிருந்தனர்.