districts

img

கோவை வேளாண் கல்லூரி மாணவர்கள் போராட்டம்: கைது செய்யப்பட்டிருந்த மாணவர் சங்கத்தினர் 7 பேரை நீதிபதி ஜாமீனில் விடுவிப்பு

கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டிருந்த மாணவர் சங்கத்தினர் 6 பேரை நீதிபதி ஜாமீனில் விடுவித்தார்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள வேளாண் கல்லூரிகளில் கடந்த ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் இணைய வழியில் அரியர் தேர்வு நடைபெற்றது.இதில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற நிலையில், அதன் முடிவுகள் சமீபத்தில் வெளியாகின. அதில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை.இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் முரையிட்டபோது, இணைய வழியில் நடைபெற்ற தேர்வில் மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, பல்கலைக்கழக நிர்வாகத்தை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கடந்த திங்களன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கோரிக்கை பதாகைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரனிடம் மனு அளித்திருந்தனர்.

இந்த நிலையில் இரண்டாவது நாளாக செவ்வாயன்று இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் மாலை பல்கலைக்கழக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, போராட்டத்தை முன்னின்று நடத்திய இந்திய மாணவர் சங்கத்தினர் 7 பேரை  செவ்வாயன்று இரவு காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட மாணவர் சங்கத்தினரை இன்று 08-12-2021 காலை கோவை நீதிமன்றத்தில் காவல் துறையினர்  ஆஜர்படுத்தினர்.

இதையடுத்து, டிசம்பர்-17 ம் தேதி வரை எந்த போராட்டத்திலும் ஈடுபட கூடாது என நீதிபதி அறிவுறுத்தி, கைது செய்யப்பட்ட மாணவர்கள் 6 பேரையும் ஜாமீனில் விடுவித்தார்.

கடந்த அதிமுக ஆட்சியில் ஜனநாயக முறையிலான போராட்டங்கள் காவல்துறையினரால் ஒடுக்கப்பட்டது.அதே முறையே தற்போதும் தொடர்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச்செயலாளர் வீ.மாரியப்பன் செய்தியாளர்களிடம் கூறுகையில், அதிமுக ஆட்சி காலத்தில் காவல்துறை எத்தகைய முறையைக் கையாண்டதோ, அதே போக்கை இப்போதும் காவல்துறை கையாள்வதை தமிழக முதல்வர் தலையீடு செய்ய வேண்டும். காவல்துறையின் இந்த அராஜக போக்கை கண்டித்து இன்று 08-12-2021 தமிழகம் முழுவதும் மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார்கள் என தெரிவித்தார்.

 

 

;