districts

img

சாதி ரீதியாக திட்டிய அதிமுக வார்டு உறுப்பினர் தூய்மை பணியாளர்கள் ஆவேசம்

சேலம், ஏப். 4- சேலத்தில் சாதி ரீதியாக திட்டிய அதிமுக வார்டு உறுப்பி னரின் பதவியை ரத்து செய்து, அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி துப்புரவு பணியாளர்கள் ஆட்சியர் அலு வலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், தாசநாயக்கன்பட்டியைச் சேர்ந்த வர் துப்புரவு பணியாளர் புஷ்பராஜ். இவரை  அதிமுகவை சேர்ந்த தாசநாயக்கன்பட்டி 2 ஆவது வார்டு உறுப்பினர் தகாத வார்த்தையில் பேசியும், சாதி பெயரை சொல்லி இழிவுபடுத்தியும் பேசியதாக கூறப்படுகிறது. இதை கண் டித்து தாசநாயக்கன்பட்டி பகுதியில் பணிபுரியும்  துப்பு ரவு பணியாளர்கள் கடந்த 4 நாட்களாக வேலை நிறுத்தத் தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், இதுவரை அவர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் திங்க ளன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை யிட்டனர். அப்போது, காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி மூன்று பேரை மட்டும் புகார் மனு அளிக்க அனுமதி யளித்தனர். இந்த மனு அளித்த பிறகு துப்புரவு பணியா ளர் புஷ்பராஜ் உள்ளிட்டோர் கூறுகையில், நாங்கள் அளித்த புகார் மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படா விட்டால் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடு வோம் என தெரிவித்தனர்.  முன்னதாக, இவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக இந்திய குடியரசு கட்சியின் மாவட்ட தலைவர் பழனிசாமி, மத்திய துணை தலைவர் கண்ணன், கிழக்கு மாவட்ட துணைத் தலைவர் ஜோதிராஜ், பனமரத்துப்பட்டி விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகி சுரேஷ் உள்ளிட்ட பலர் உடனிருந்த னர்.